தாய்க்கு வாங்கும் சேலையை மேடை போட்டு கொக்கரிக்கமுடியாது : அஸ்மி அப்துல் கபூர் !

தாய்க்கு வாங்கும் சேலையை மேடை போட்டு கொக்கரிக்கமுடியாது..அதாஉல்லாஹ் வின் சேவைகளும் அவ்வாறானதே பிரத்தியோக நேர்காணல்: அஸ்மி ஏ கபூர் மாநகர சபை உறுப்பினர் அக்கரைப்பற்று நேர்கண்டவர்:இம்றாஸ்

azmy

#இம்றாஸ்: அதாஉல்லாஹ் அமைச்சருடைய அரசியல் இருப்பு கேள்விக்குறியாகி இருக்கும் சூழலில் அமைச்சர் ரிசாட் உடனான கட்சியுடன் உடன்பாடு குறித்து…
##அஸ்மி:: எனக்கு உண்மையிலே தெரியாது தலைவர் எடுக்கின்ற முடிவுகள் எதுவாக இருந்தாலும் உடன்படுவேன் முஸ்லீம் சமுகமே மகிந்தவை எதிர்த்த போது எமது தலைமை உண்மையை உணர்ந்து விளக்கியது நாம் முடிவுக்கு கட்டுப்பட்டோம்.கூட்டிணைவு தேர்தல் நிலைப்பாடு தொடர்பில் முடிவடுக்கும் முழுப் பொறுப்பும் தலைவருக்கு உண்டு. அதாஉல்லாஹ் விடம் கேட்க வேண்டிய கேள்வி என்னிடம் கேட்கிறீர்கள்,
அனேகமாக இனிவரும் காலம் கட்சி தனித்து பயணிக்கும் எழுச்சி மிகு காலமாகதான் இருக்கும்
உண்மை பின்னடைவதாக இருந்தாலும் வீழாது.

#இம்றாஸ்: சாய்ந்தமருது உள்ளூராட்சி சபையை உருவாக்கி தருவதாக கூறிய அமைச்சரால் ஏன் நிறைவேற்ற முடியாது போனது..
##அஸ்மி::கல்முனை மாநகரசபையை பிளவுபடுத்தலென்பது இரு சமுகங்கங்களின் சமநிலை தொடர்பில் பார்க்க வேண்டும் ஏனென்றால் அக்கரைப்பற்றை இரு கூறாக பிரித்த அவலத்தை அக்கரைப்பற்று இன்று வரைக்கும் அனுபவிக்கிறது
கல்முனையை நான்கு சபைகளாக பிரிப்பதற்கான அனைத்து வேலைத்திட்டங்களும் நிறைவடைந்து அரச அச்சகத்துக்கும் சென்ற பிறகு தேர்தல் ஆனணயாளருக்கு அறிவுறுத்தல் வழங்கி தடுத்து நிறுத்தி இன்று நீலிக்கண்ணீர் வடிப்பவர்கள் யாரன மக்கள் அறியாமலில்லை
இவர்களது அரசியல் சுயநலம் மட்டும் இல்லாதிருந்தால் சாய்ந்த மருது நகரசபை
கல்முனை மாநகரம்
கல்முனை நகரசபை தமிழ்
மருதமுனை நகர சபையை பெற்றிருக்கலாம் கல்முனையில் இருக்கிற ஒருவர் எம் பி யாவதற்க்கு தடுத்து நிறுத்திய சூழ்ச்சி…சின்ன குழந்தைக்கும் தெரிந்த கதை

#இம்றாஸ்:அக்கரைப்பற்று மேயராக நிறைய பேர் முன்மொழியப்படுகிறார்களே?
##அஸ்மி::யாரால்; தலைவரால் எடுக்கப்படுகின்ற தீர்மானங்களுக்கு யாரும் உரிமம் கோர முடியாது
#இம்றாஸ்:நுரைச்சோலை வீட்டுத்திட்டம் கைவிட்டு போய் விடுமா?
## அஸ்மி::நல்லாட்சி யில் சுனாமி வீடுகளுக்கு எதிராக வழக்கு போட்ட ஜாதிக ஹெல உறுமய வுடன் பேசி மக்களுக்கு அதை செய்து கொடுக்க வேண்டும் அதாஉல்லாஹ் கெதிரான மக்களை தூண்டியவர்கள் மெளனியாகவே இருக்கிறார்கள். மக்களுக்கு தெரியும் அதாஉல்லாஹ் வால் எவ்வளவு நஷ்டஈடு பெற்றிருக்கிறார்கள் என்று

#இம்றாஸ்; வட்டமடு விவசாயிகளது
பிரச்சினை , நுரைச்சோலை நெற்செய்கையாளர்களது பிரச்சினைகள் தொடர்பில்

##அஸ்மி::அதாஉல்லாஹ் தீர்வுகளை முன் மொழிந்து வழிநடாத்துகிற போது அவசரப்பட்டு அரசியல் விற்பன்னர்களது பேச்சை கேட்டு சென்ற வட்டமடு விவசாயிகள் நடு வீதியில் விடப்பட்டிருக்கிறார்கள் இது தொடர்பில் விவசாயிகள் தான் பேச வேண்டும்
நுரைச்சோலை நெற்செய்கை யாளர்களுக்கு குறித்த அமைச்சரினால் இந்த போகத்துக்கு நெற்செய்கை செய்வதற்கு வழங்கப்பட்ட அறிவுறுத்தல் கள் கூட சீனிக்கூட்டுத்தாபனத்தால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை
அதாஉல்லாஹ் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சராக இருந்து மிகவும் பக்குவமாக கையாண்ட விடயங்களை வீதிக்கெடுத்து அரசியல் லாபம் பெற முனைந்தவர்களால் ஏற்பட்ட வினை

#இம்றாஸ்::இந்த பாரளுமன்ற தோல்வி குறித்து

#அஸ்மி::ஒரு முறை பெருந்தலைவர் காமராஜர் தேர்தலில் தோல்வியடைந்து தி.மு.க.வென்ற போது தொண்டர் ஒருவர் கேட்டிருக்கிறார் எவ்வளவே சேவைகளை செய்த நாம் தோல்வியடைந்து விட்டோமே என்று அதற்க்கு காமராஜர் சொன்ன பதில் தாய்க்கு வாங்கி கொடுத்ததை சொல்லிக்காட்டலமா? அதை வைத்து அரசியல் செய்யலாமா என்று அதே சாதிதான் அதாஉல்லாஹ் வும் என வைத்துக்கொள்ளுங்கள்.தலைவரின் வெற்றிடம் உணரப்படுகிறது உணரப்படும் என்பது மட்டும் உண்மை.
# இம்றாஸ்:அக்கரைப்பற்றிலே இருக்கும் மு.கா போரளிகள் இரு பிரிவுகளாக செயற்படுகிறார்களே அது தொடர்பில்
#அஸ்மி:: போரளிகளா எப்போதிருந்து? இந்த கட்சிக்காக அதன் வளர்ச்சிக்காக செய்ததியாகங்கள் என்ன? தலைவர் அஷ்ரபை ஏற்றுக்கொண்டவர்களா? மரத்தை வெட்டிய கோடரிகள் இணைந்து மரத்தில் மேலேறி போரளி எனும் நிலை அது அக்கரைப்பற்றில் மட்டுமா? அனைத்து இடங்களிலும்தான்