இலங்கையில் அரசியல் தலைமையில் ஏற்பட்ட மாற்றம் சுகமான அதிகார பரிமாற்றம் ஆகியன இந்த வருடம் உலகில் இடம்பெற்ற முக்கிய நிகழ்வுகளில் ஒன்று என ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் பான் கீ மூன் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையின் ஆண்டிறுதி ஊடக மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அத்துடன் நைஜீரிய அரசியலில் இடம்பெற்ற மாற்றங்களும் வரவேற்க்கத்தக்கவையென குறிப்பிட்டுள்ள அவர் மூன்றாவது தடவையாகவும் ஜனாதிபதி பதவியைப்பெற முயற்சி செய்த மஹிந்த ராஜபக்ச தேர்தலில் தோல்வியடைந்து பதவி விலகியமையையும் சுட்டிக்காட்டியுள்ளார்.