ஏர் பிரான்ஸ் விமானத்தில் போலி வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்ட விவகாரத்தில் பிரான்ஸை சேர்ந்த முன்னாள் போலீஸ் அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
459 பயணிகள் மற்றும் 14 பணியாளர்களுடன் மொரிஷியஸில் இருந்து நேற்று முன்தினம் பாரீஸ் புறப்பட்டு சென்ற விமானத்தில், சந்தேகத்திற்கு இடமான பொருள் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து கென்யாவில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. பயணிகளை இறக்கிவிட்ட பிறகு நடத்தப்பட்ட சோதனையில் அந்த பொருள் காட்போர்டு (தடிமனான அட்டை), சில காகிதத் தாள்கள் மற்றும் ஆகியவற்றைக் கொண்டு உருவாக்கப்பட்டது தெரியவந்தது.
இந்நிலையில் விமானத்தில் போலி வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்ட விவகாரத்தில் அந்த விமானத்தில் பயணம் செய்த 58 வயது முன்னாள் போலீஸ் அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் அவருடன் பயணம் செய்த அவரது மனைவியிடமும் சாட்சி என்ற அடிப்படையில் விசாரணை நடைப்பெற்று வருகிறது.
அண்மையில், நடந்த பாரிஸ் தாக்குதலில் 130 பேர் கொல்லப்பட்ட சம்பவம் பிரான்ஸ் மக்களை பெரும் அச்சத்தில் ஆழ்த்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.