அஷ்ரப் ஏ சமத்
பலஸ்தீன்-இஸ்ரேல் ஜெருசலமில் அமைந்துள்ள முஸ்லீம்களின் முதலாவது கிப்லா காட்டும் பள்ளிவாசலின் பொறுப்பாக உள்ள பேஸ் இமாம் மற்று அப்பாராஸ் (ரலி) பரம்பரையினரான அஷ் ஷேக் அலி ஓமா் யாக்ஹூப் அல் அப்பாஸ் அவா்கள் 3 நாள் விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ளாா். நேற்று இரவு யாவத்தையில் உள்ள ஹிஸ்புல்லாவின் அமைச்சா் வாசஸ்தலத்தில் வைத்து இராப்போசனம் இடம் பெற்றது. அத்துடன் அவா் இசாத் தொழுகையை நடாத்தினாா். அத்துடன் அரபியில் சொற்பொழிவை ஆற்றினாா். இந் நிகழ்வில் முஸ்லீம் அமைச்சா்கள், பிரதி அமைச்சா்கள் துருக்கி, ஈரான், பங்களதேஸ், பாக்கிஸ்தான், ஆப்கணிஸ்தான், பலஸ்தீன், சவுதி, போன்ற நாடுகளின் துாதுவாகள், கல்வியியலாளா்கள், காத்தான்குடி முக்கியஸ்த்தா்கள் ஊடகவியலாளா்கள் பலரும் கலந்து கொண்டனா்.
இந் நிகழ்வின்போது இலங்கையில் இஸ்ரேல் துாதரகம் நிறுவதனை தடுத்து நிறுத்தும் படியும் அமைச்சா் ராஜித்தவிடம் அவரினால் வேண்டுகோள் விடுத்தாா். பிரதான இமாம். இந்த சிறிய நாட்டில் முஸ்லீம் பராளுமன்ற உறுப்பிணா்கள் 23 பேர் மற்றும் அமைச்சாக்ள பிரதியமைச்சா்கள் இந்த அரசில் அங்கம் வகிப்பதையிட்டு பாராட்டினாா். இன்று பிரதமரை சந்தித்தும் இஸ்ரேல் துாதரகம் நிறுவுவதை பற்றியும் கலந்துரையாடுவாா்.