எதிர்வரும் ஜனவரி மாதம் 8ஆம் திகதிக்கு முன்னர் அமைச்சரவையில் மாற்றங்களை ஏற்படுத்த அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜனவரி மாதத்தில் நடைபெறவுள்ள பாராளுமன்ற அமர்வுகளுக்கு முன்னர் இந்த அமைச்சரவை மாற்றம் இடம்பெறவுள்ளதாக அரச தரப்பினரை மேற்கோள்காட்டி சிங்கள இணையத்தளமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அத்துடன், ஒன்றிணைந்த எதிர்க்கட்சியிலுள்ள மக்கள் பிரதிநிதிகள் சிலரும், அரசாங்கத்துடன் இணைவதற்கான சாத்தியகூறுகள் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
அவ்வாறு அரசாங்கத்துடன் இணைந்துக் கொள்ளவுள்ள பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இராஜாங்க அமைச்சு பதவிகள் கிடைக்கவுள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், வழங்கப்படவுள்ள இராஜாங்க அமைச்சு பதவி குறித்து இதுவரை இறுதி தீர்மானம் எட்டப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.