சுதேச மருத்துவதுறையை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை : Dr .நக்பர் !

அபு அலா 

கிழக்கு மாகாணம் உட்பட நாடு முழுவதும் எதிர்வரும் 2 ஆண்டுகளுக்குள் சுதேச மருத்துவதுறையை அபிவிருத்தி செய்வதுடன் நாட்டுக்கு ஏற்றவகையில் சட்ட சீர்திருத்தங்களையும் கொண்டு வருவதற்கும் புதிய அபிவிருத்தி பணிகளை மேற்கொள்வதற்கும் பிரதி சுகாதார அமைச்சர் பைசால் காசிம் முன்னெடுத்து வருவதாக அட்டாளைச்சேனை தள ஆயுள்வேத வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகரும் பிரதி சுகாதார அமைச்சரின் சுதேச மருத்துவத்துறை விஷேட ஆலோசகருமான டாக்டர் கே.எல்.எம்.நக்பர் இன்று (19) தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

nakfar

குறிப்பாக, கடந்தகால யுத்தம் மற்றும் சுனாமி அழிவினால் மிகவும் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மாகாணங்களில் சுதேச வைத்தியத்துறையை மக்கள் மத்தியில் கொண்டு சென்று அவர்களுக்கு இத்துறையின் மூலம் பாரிய சேவைகளையும் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதன் முதற்கட்டமாக, கிழக்கு மாகாணத்தின் திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் 2016 ஆம் ஆண்டின் முதற்பகுதியில் ஆரம்பிக்கப்படவுள்ளது. பின்னர் வட மாகாணம் உட்பட நாடு முழுவதும் இந்த அபிவிருத்திப் பணிகளை செய்வதற்கு பாரிய திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

2016 ஆம் ஆண்டின் புதிய வரவு செலவுத் திட்டத்தில் சுகாதார அமைச்சரின் சிபார்சிக்கு அமைய மிக அதிகமான பணம் மாகாண சபைகளுக்கும், வைத்தியசாலைகளுக்கும் ஒதுக்கப்பட்டு இந்த பாரிய அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் பிரதி சுகாதார அமைச்சரின் சுதேச மருத்துவத்துறை விஷேட ஆலோசகர் டாக்டர் கே.எல்.எம்.நக்பர் மேலும் தெரிவித்தார்.