நாடாளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற வாய்மூல விடைக்கான வினாவின் போது ஜே.வி.பியின் பிமல் ரத்நாயக்க எம்.பியால் எழுப்பப்பட்ட கேள்விக்கு வெளிவிவகார பிரதியமைச்சர் ஹர்ஷ டி சில்வா வழங்கிய பதிலிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளிநாடுகளிலுள்ள இலங்கைக்கான தூதரகங்களில் தூதுவர்களாக, உயர்ஸ்தானிகர்களாக, பிரதிநிதிகளாக கடமைபுரியும் வெளிநாட்டு சேவையைச் சேர்ந்தவர்கள், சேராதவர்களின் விவரங்களை பிமல் ரத்நாயக்க எம்.பி. கேட்டிருந்தார்.
இதற்குப் பதிலளித்த வெளிவிவகார பிரதி அமைச்சர் ஹர்ஷ டி சில்வா,
அவுஸ்திரேலியா, மலேஷியா, சீசெல்ஸ், சிங்கப்பூர், தென்னாபிரிக்கா, ஆப்கானிஸ்தான், பிரேஸில், சீனா, பிரான்ஸ், ஜேர்மன், ஈரான், இத்தாலி, ஜப்பான், மியன்மார், நேபாள், கட்டார், ரஷ்யா, சவூதி அரேபியா, ஐக்கிய அரபு இராச்சியம், ஐக்கிய அமெரிக்கா (தூதுவர்), ஐக்கிய அமெரிக்கா (ஐ.நா.நிரந்தரப் பிரிதிநிதி), பலஸ்தீன்,அவுஸ்திரேலியா (கொன்சல் நாயகம்), பாகிஸ்தான் (கொன்சல் நாயகம்), ஐக்கிய அரபு இராச்சியம் (கொன்சல் நாயகம்) ஆகிய நாடுகளில் உள்ள உயர்ஸ்தானிகர்கள், தூதுவர்கள், பிரதிநிதிகள், கொன்சல் நாயகம் ஆகியோர் வெளிநாட்டுச் சேவையை சாராதவர்கள் என்றார்.