வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர நேற்று, கனேடியத் தூதுவர் ஷெல்லி வைற்றிங்குடன் இணைந்து மன்னார் மடுப்பகுதிக்குச் சென்று கண்ணிவெடிகள் அகற்றப்படும் பகுதிகளைப் பார்வையிட்டிருந்தார்.
போர் முடிவுக்கு வந்து ஆறு ஆண்டுகளுக்குப் பின்னர், கண்ணிவெடிகளைத் தடைசெய்யும் அனைத்துலக உடன்பாட்டில் கையெழுத்திட இலங்கை அரசாங்கம் தயாராக இருப்பதாக வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர உறுதியளித்துள்ளார்.
வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர நேற்று, கனேடியத் தூதுவர் ஷெல்லி வைற்றிங்குடன் இணைந்து மன்னார் மடுப்பகுதிக்குச் சென்று கண்ணிவெடிகள் அகற்றப்படும் பகுதிகளைப் பார்வையிட்டிருந்தார்.
இதன்போதே, 1997ஆம் ஆண்டு கனடாவின் முயற்சியில் உருவாக்கப்பட்ட கண்ணிவெடிகளைத் தடைசெய்யும் ஒட்டாவா பிரகடனத்தில் கையெழுத்திட அரசாங்கம் தயாராக இருப்பதாக மங்கள சமரவீர உறுதியளித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அடுத்த ஆண்டு இந்த உடன்பாட்டில் கையெழுத்திடுவது குறித்து இலங்கை அரசாங்கம் கவனம் செலுத்துவதாகவும், அவர் குறிப்பிட்டுள்ளார்.