பிரதான பொலிஸ் பரிசோதகர்கள் 6 பேருக்கு உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளன.
அதன்படி தலங்கம பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பி.பி.ஸி. ஜானக குமார சிலாபம் வலயத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.
பொல்கஹவல பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி என்.என். ஹேரத், தலங்கம பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாகவும், கிண்ணியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக இருந்த எச்.ஏ.பி. ரணசிங்க பொல்கஹவல பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
கொழும்பு தெற்கு வலயத்தில் கடமையாற்றிய எம்.பி விஜேசிறி, கிண்ணியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
மாவனல்லை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக கடமையாற்றிய எஸ். பிரதீப் குமார, பண்டாரவளை பொலிஸ் நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.
பண்டாரகம பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக கடமையாற்றிய எம்.டீ.டீ. திலங்க மாவனல்லை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.