ஜவ்பர்கான்
மட்டக்களப்பு, கல்லடி பொதுச் சுகாதாரப் பிரிவில் போலி லேபல் ஒட்டப்பட்ட 07 தேன் போத்தல்களையும் சுமார் பெருமளவு கிழங்கு சீவல் பொதிகளையும்; மருத்துவச் சான்றிதழின்றியும்இ அனுமதி பெறப்படாதும் உணவு தயாரித்து விற்பனை செய்துவந்த நடமாடும் உணவு வாகனமொன்றையும் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் கைப்பற்றியுள்ளனர்.
கல்லடிப் பகுதியில் நேற்று) மாலை மேற்கொள்ளப்பட்ட திடீர்ச் சோதனையின்போது, இவை கைப்பற்றப்பட்டதாக கல்லடிப் பிரதேச பொதுச் சுகாதார பரிசோதகர் க.ஜெய்சங்கர் தெரிவித்தார்.
இவற்றை விற்பனை செய்தவர்களுக்கு எதிராக மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் உணவு மாதிரிகள் பகுப்பாய்வு திணைக்களத்திற்கு அனுப்பியுள்ளதாகவும் அவர் கூறினார்.
கிழங்கு சீவல் விற்பனையாளர் இதன்போது தப்பிச்சென்றுள்ளதாகவும் அவர் கூறினார்.