புதிய இடதுசாரி முன்னணியின் பொதுச் செயலாளர் கலாநிதி விக்ரமபாகு கருணாரட்னவிற்கு ஓய்வூதியம் வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கலாநிதி விக்ரமபாகு பேராசிரியராக கடமையாற்றி வந்தார்.
ஜே.வி.பி. கலவரம் இடம்பெற்ற காலத்தில் விக்ரமபாகு நீக்கப்பட்டிருந்தார்.
பணி நீக்கப்பட்டமை காரணமாக அவருக்கு ஓய்வூதியமோ அல்லது வேறும் கொடுப்பனவுகளோ வழங்கப்படவில்லை.
எனினும் அண்மையில் ஜனாதிபதியாக தெரிவான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, கலாநிதி விக்ரமபாகுவிற்கு நிலுவைச் சம்பளங்கைளயும் ஓய்வூதியத்தையும் வழங்குமாறு பணிப்புரை விடுத்திருந்தார்.
நிர்வாக சிக்கல்கள் காரணமாக இந்த கொடுப்பனவுகள் வழங்கப்பட்டிருக்கவில்லை.
எனினும் தற்போது அமைச்சரவையின் அங்கீகாரத்தின் அடிப்படையில் விரைவில் அவருக்கான கொடுப்பனவுகள் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.