அரசாங்கம் அதிகாரத்திற்கு வந்த மறுதினத்தில் இருந்து ஆட்சியைக் கவிழ்க்க நடவடிக்கை எடுக்காது, நாட்டின் எதிர்காலத்திற்காக பொறுப்புடன் கடமைகளை நிறைவேற்ற அனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
கொழும்பு தாமரைத் தடாகத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
ஜனநாயக முறைப்படி அமைக்கப்பட்ட புதிய அரசாங்கத்திற்கு அனைவரும் ஒத்துழைத்து நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதே, உலகிலுள்ள பெரும்பாலான நாடுகளில் நடைபெறும் அரசியல் செயற்பாடு என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனினும் எமது நாட்டில் கடந்த பத்தாண்டுகளாக காணக்கிடைப்பது, ஆட்சிக்கு வந்த அரசியல்வாதிகளுக்கு எதிராக குற்றம்சுமத்தி அவர்களை வௌியேற்ற சதிசெய்வதே எனவும் ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டுள்ளார்.