ஊவா மாகாண சபையின் வரவு செலவுத் திட்டம் அதி கூடிய வாக்குகளால் நிறைவேற்றம் !

575849166Untitled-1

ஊவா மாகாண சபையின் வரவு செலவுத் திட்டம் அதி கூடிய வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

நேற்று இரவு வரவு செலவுத் திட்டம் குறித்த வாக்கெடுப்பு இடம்பெற்றுள்ளது. 

இதன்போது ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புடன் இணைந்து ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்களும் சாதகமாக வாக்களித்துள்ளமை விஷேட அம்சமாகும். 

இதேவேளை இதற்கு எதிராக வாக்களித்தது மக்கள் விடுதலை முன்னணியின் சமந்த விதாரத்ன மட்டுமே. 

இதன்படி ஊவா மாகாண சபைக்கான 2016ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் 25 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

அத்துடன் ஊவா மாகாண சபையின் அபிவிருத்தி வரலாற்றில் அதிகபடியாக கருதப்படும் 4000 மில்லியன் ரூபாய் நிதியை அரசாங்கத்தில் ஒதுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, அம் மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தஸநாயக்க குறிப்பிட்டுள்ளார்.