சிட்னி நகரின் பல பகுதிகள் இருளில் மூழ்கிக் கிடக்கின்றன!!

ஆஸ்திரேலிய பெருநகரங்களில் ஒன்றான சிட்னியை இன்று மணிக்கு 213 கி.மீ. வேகத்தில் ஆலக்கட்டி மழையுடன் தாக்கிய கோரப் புயலால் கார்கள் மற்றும் வீடுகள் கடும்சேதம் அடைந்தன.

Unknown

ஆலங்கட்டி மழை ஒவ்வொன்றும் ஒரு கிரிக்கெட் பந்தின் அளவில் விழுந்ததால் மக்கள் பீதியுடன் கூச்சலிட்டபடி ஓட்டம் பிடித்தனர். சுழற்றியடித்த புயல் காற்றுடன் தொடர்ந்துபெய்த ஆலங்கட்டி மழையால் மரங்கள் வேரோடு சாய்ந்தன. சில வீடுகளின் மேற்கூரைகள் சேதம் அடைந்தன. கார்கள் தலைகீழாக புரட்டிப் போடப்பட்டு குப்புற கவிழ்ந்து கிடந்தன.

தொடர்மழையின் விளைவாக நகரின் பல பகுதிகளில் உள்ள வீதிகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகின்றது. ஆயிரக்கணக்கான வீடுகளுக்கு செல்லும் மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதால் நகரின் பல பகுதிகள் இருளில் மூழ்கி கிடக்கின்றன. சிட்னி நகரின் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கும் மற்றும் இங்கிருந்து புறப்பட்டு செல்லும் பெரும்பாலான விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

7e9d0962-c5fd-4775-bd40-403d6eea4f25_S_secvpf