முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, முன்னாள் ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல ஆகியோரிடம் எதிர்வரும் 17ம், 18ம் திகதிகளில் விசாரணை நடத்தப்படவுள்ளது.
சுயாதீன தொலைக்காட்சியில் இடம்பெற்ற மோசடிகள் தொடர்பில் விசாரணை நடத்தப்படவுள்ளது.
பாரிய நிதி மோசடிகள் தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழுவினால் இந்த சம்பவம் குறித்த விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன.
நாளையும் நாளை மறுதினமும் பொதுமக்களிடம் சாட்சியங்கள் திரட்டப்படவுள்ளன.
கடந்த ஜனாதிபதி தேர்தல் காலத்தில் பாரியளவில் தேர்தல் பிரச்சார விளம்பங்கள் செய்யப்பட்டு அதற்கான பெருந்தொகைக் கட்டணம் செலுத்தப்படவில்லை எனக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவும், கெஹலியவும் ஏற்கனவே இந்த விசாரணைகளில் பங்கேற்றிருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.