மாலைதீவில் போராட்டம், 193 பேர் கைது …

7b5f295c-a113-4a21-b50e-2b4676c56b18_S_secvpf

மாலைதீவில், முன்னாள் அதிபர் நஷீதை விடுவிக்க கோரி, அரசுக்கு எதிராக போராட்டம் நடத்திய, எதிர்க்கட்சியினர் மீது போலீசார் தடியடி நடத்தினர். முக்கிய தலைவர்கள் உட்பட போராட்டத்தில் பங்கேற்ற 193 பேர் கைது செய்யப்பட்டனர்.

மாலைதீவு முன்னாள் அதிபர் நஷீத். இவர், மூத்த நீதிபதி ஒருவரை சிறையில் அடைத்த வழக்கு தொடர்பாக, கடந்த மார்ச் மாதம் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில், அவருக்கு, 13 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

இது, மாலைதீவு அதிபர் யமீன் அப்துல் கயூமின் பழி வாங்கும் நடவடிக்கை என்று கூறி, அங்கு எதிர்க்கட்சியினர், போராட்டம் நடத்தி வருகின்றனர். நேற்று முன்தினம், மாலே நகரில், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் தடுக்க முயன்றபோது, இரு தரப்பிற்கும் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. 

போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். இதில், பலர் படுகாயம் அடைந்தனர். அத்துடன், முக்கிய எதிர்க்கட்சி தலைவர்கள் உட்பட, 193 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.