அடுத்த குறி உங்களுக்கு தான்: ஐ.எஸ்.ஐ.எல் தலைவர்களுக்கு ஒபாமா எச்சரிக்கை!

 
ஈராக் மற்றும் சிரியாவில் உள்ள ஐ.எஸ்(இஸ்லாமிய தேசம்) பகுதிகளில் அமெரிக்க கூட்டுப் படைகள் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகின்றது. 

இந்நிலையில், ஐ.எஸ் தீவிரவாத இயக்க ஆதரவாளர்கள் அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக நடத்திய, 14 பேரை பலி கொண்ட துப்பாக்கிச் சூடு சம்பவம் அந்நாட்டையே அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. உலகம் முழுக்க உள்ள பல்வேறு நாடுகளில் தீவிரவாதத்திற்கு எதிராக நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக கூறிக் கொள்ளும் அமெரிக்காவிற்கு தன் நாட்டிலேயே தீவிரவாத நடவடிக்கை அரங்கேறியது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதனை தொடர்ந்து, அமெரிக்காவின் பென்டகன் நகரில் உயர் பாதுகாப்பு அதிகாரிகளுடன் அதிபர் பராக் ஒபாமா நேற்று ஆலோசனை நடத்தினார். பின்னர் பேசிய அவர், “ஐ.எஸ்.ஐ.எல் தீவிரவாதம் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு தற்போது வலிமையாக உள்ளது.” என்றார்.

images

மேலும், “சிரியா மற்றும் ஈராக்கில் ஏவுகணை தாக்குதல்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது. ஐ.எஸ் தலைவர்களை ஒவ்வொருவராக வெற்றிகரமாக தோற்கடித்து வெளியேற்றி வருகிறோம். ஐ.எஸ்.ஐ.எல் தலைவர்கள் இனி ஒழிந்து கொள்ள முடியாது. எங்களது அடுத்த குறி உங்களுக்குத் தான்.” என்று கூறினார்.