இலங்கை பாதுகாப்பு அமைச்சில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இந்தச் சந்திப்பில் இந்தியத் தூதுவருடன், துணைத் தூதுவர், அரிந்தம் பக்சி, இந்தியத் தூதரக பாதுகாப்பு ஆலோசகர் கப்டன் பிரகாஸ் கோபாலன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் தொடர்பாக இந்தச் சந்திப்பில் பேசப்பட்டதாக, இலங்கை பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
எனினும், இலங்கை விமானப்படைக்கு பாகிஸ்தானிடம் இருந்து போர் விமானங்களை கொள்வனவு செய்யும் விவகாரத்தினால் ஏற்பட்டுள்ள இழுபறிகள் குறித்தே இந்தச் சந்திப்பின் போது, பேசப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
பாகிஸ்தானிடம் போர் விமானங்களை இலங்கை வாங்குவதை இந்தியா எதிர்த்து வருகிறது.
இதுதொடர்பான இந்தியாவின் எதிர்ப்பை, இலங்கை வெளிவிவகார அமைச்சரிடம் ஏற்கனவே இந்தியத் தூதுவர் வெளிப்படுத்தியிருந்தார்.
இந்தநிலையில், துணைத் தூதுவர் மற்றும் பாதுகாப்பு ஆலோசகர் ஆகியோருடன்,இந்தியத் தூதுவர் வை.கே.சின்ஹா, இன்று சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சுக்குச் சென்று, பாதுகாப்புச் செயலருடன் இதுபற்றிப் பேசியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த விவகாரம் குறித்துப் பேச இந்தியா சிறப்புத் தூதுவர் ஒருவரை கொழும்புக்கு அனுப்பவுள்ளதாகவும் ஏற்கனவே தகவல்கள் வெளியாகியிருந்தன.