காத்தான்குடி நகரசபை பிரிவில் டெங்கு பரப்பும் காணிகள் நகரசபையால் சுவீகரிப்பு!

 

ஜவ்பர்கான்-

காத்தான்குடி நகர சபை பிரிவில் டெங்கு நோய் வேகமாக பரவும் சாத்தியம் உள்ளதாக காத்தான்குடி பிரதேச சுகாதார வைத்தியதிகாரி டாக்டர் யூ.எல்.நஸீர்தீன் தெரிவித்தார்.கடந்த 40 நாட்களில் 4பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 8பேர் நோயாளிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளனர் எனவும் அவர் தெரிவித்தார்.

S3030008_Fotor_Collage_Fotor

இதனை தடுக்க டெங்கு நுளம்புகள் உற்பத்தியாகக் கூடிய வகையில் மக்கள் வாழும் பகுதிகளில் காணிகளை வைத்திருந்தவர்கள் இனங்காணப்பட்டு அவர்களது காணிகள் நகரசபையினால் சுவீகரிக்கப்பட்டுவருவதாக நகரசபை செயலாளர் எஸ்.சர்வேஸ்வரன் தெரிவித்தார்.இதுவரை இருவெற்றுக்காணிகள் சுவீகரிக்கப்பட்டுள்ளதுடன் தொடர்ந்தும் இந்நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவிதத்hர்.

கடந்த காலங்களில் டெங்கு நோயினால் இப்பிரதேசத்தில் பலர் இறந்தும் பாதிக்கப்பட்டும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

தற்போது அடிக்கடி மழை பெய்வருதால் அதிகமான இடங்களில் நீர் தேங்கியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.