சவுதி வரலாற்றில் முதன்முறையாக நகராட்சி தேர்தலில் பெண் வேட்பாளர் வெற்றி!

 

மன்னர் ஆட்சி நடைபெறும் சவுதி அரேபியாவில் இதுவரை பெண்களுக்கு ஓட்டு உரிமை கிடையாது. பெண்கள் தேர்தலில் போட்டியிடவும் முடியாது. பெண்கள் வாகனங்கள் ஓட்டவும் அனுமதி இல்லை. கடந்த ஜனவரி மாதம் மன்னர் அப்துல்லா மரணம் அடைவதற்கு முன்பாக சில சீர்திருத்தங்களை கொண்டு வந்தார். இதில் பெண்களுக்கு ஓட்டுரிமை வழங்குவதும் அடங்கும்.

images

இந்தநிலையில், சவுதி அரேபியாவில் உள்ள 2 ஆயிரத்து 100 உள்ளாட்சி கவுன்சில் இடங்களுக்கு நேற்று தேர்தல் நடந்தது. மேலும், 1,050 இடங்களில் மன்னர் ஒப்புதலுடன் நியமனங்கள் செய்யப்படும். பொதுவாக்கெடுப்புக்கான தொகுதிகளில் 900 பெண்கள் உள்பட 6,440 பேர் போட்டியிட்டனர்.

இன்று வாக்கு எண்ணிக்கை தொடங்கிய நிலையில் மக்கா நகரில் உள்ள மடறக்கா நகராட்சி உறுப்பினர் தொகுதிக்கு போட்டியிட்ட சல்மா பின்ட் அல்-ஒட்டெய்பி என்பவர் வெற்றி பெற்றுள்ளார். இவரை எதிர்த்து போட்டியிட்ட ஏழு ஆண்கள் மற்றும் இரு பெண் வேட்பாளர்களும் தோல்வியை தழுவியுள்ளனர்.