அமெரிக்காவின் இராஜாங்கத் திணைக்கள ஆலோசகர் தோமஸ் செனோன் (Thomas Shannon) நாளை இலங்கை வரவுள்ளார்.
தற்போது அவர் பங்களாதேஷூக்கு விஜயம் செய்துள்ளதாக இலங்கைக்கான அமெரிக்கத் தூதரகம் குறிப்பிட்டுள்ளது.
மேலும் இலங்கை வரவுள்ள தோமஸ் செனோன் அரசாங்கத்தின் உயர் அதிகாரிகள், கட்சித் தலைவர்கள் மற்றும் சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக தெரியவந்துள்ளது.
அத்துடன் கிழக்கில் அமெரிக்க அரசாங்கத்தின் உதவியுடன் மேற்கொள்ளப்படும் வேலைத் திட்டங்களையும் அவர் பார்வையிடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.