ஈராக் மற்றும் சிரியாவில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஐ.எஸ். தீவிரவாதிகள் உலக நாடுகளுக்கு அச்சுறுத்தலாக விளங்குகின்றனர். எனவே அவர்களை அழிப்பதில் அமெரிக்கா, ரஷியா, பிரான்ஸ், இங்கிலாந்து, கனடா உள்ளிட்ட நாடுகள் ஈடுபட்டுள்ளன.
இதனால் பல நாடுகளுக்கு ஐ.எஸ். தீவிரவாதிகள் தாக்குதல் மிரட்டல் விடுத்து அதை செயல்படுத்தி வருகின்றனர். எனவே, அவர்கள் மீதான வேட்டையை தீவிரப்படுத்த ஜெனீவாவில் நடந்த ஐ.நா. மனித உரிமைகள் மாநாட்டில் முடிவெடுக்கப்பட்டது.
அதை தொடர்ந்து ஜெனீவா மற்றும் சிகாகோ, டொரண்டோ உள்ளிட்ட பல நகரங்களில் தாக்குதல் நடத்த ஐ.எஸ். தீவிரவாதிகள் திட்டமிட்டு இருப்பதாக உளவுத்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது.
எனவே கனடாவில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. அங்குள்ள டொரண்டோ, ஒட்டாவா உள்ளிட்ட பல நகரங்களில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்த தகவலை கனடா மந்திரி ரால்ப் குடேல் தெரிவித்துள்ளார்.