டெங்கு வைரஸிற்கு எதிரான தடுப்பூசி பாவனைக்கு மெக்சிக்கோ அனுமதி!

Dengue-Virus

டெங்கு வைரஸிற்கு எதிரான முதல் தடுப்பூசியினைப் பயன்படுத்த மெக்சிக்கோவின் சுகாதார அதிகாரிகள் உத்தியோகப்பூர்வ அனுமதியினை வழங்கியுள்ளனர்.

இந்தத் தடுப்பூசியினை உலகளாவிய ரீதியில் 29,000 நோயாளர்களிடம் பரிசோதித்ததாக மத்திய மருத்துவ பாதுகாப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்நிறுவனம் குறித்த மருந்தின் பெயரை வெளியிடவில்லை. ஆனால், பிரான்சின் Sanofi Pasteur, அந்த மருந்து Dengvaxia என அடையாளப்படுத்தியுள்ளது.

மெக்சிக்கோவில் டெங்கு நோய்ப்பரவல் காணப்படும் இடங்களில் 9 முதல் 45 வயதானவர்கள் மத்தியில் இந்த தடுப்பூசியைப் பாவிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த தடுப்பூசி 10 இல் 9 டெங்கு நோயாளர்களைக் குணப்படுத்தும் என நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.