அஷ்ரப். ஏ. சமத்
கோப் குழு உறுப்பினரகளுக்கான விஷேட பயிற்சி பட்டறையொன்று இன்று (10)ஆம் திகதி பி.பகல் பாராளுமன்ற 6 ஆம் இலக்க அரையில் இடம்பெற்றது.
கோப் குழுவின் தலைவர் ஜே.வி.பி பாராளுமன்ற உறுப்பிணா் சுனில் ஹந்துன்நெத்தி தலைமையில் இடம்பெற்றது. இந் நிகழ்வை சபாநாயகா் கரு ஜயசூரிய கலந்த கொண்டு பயிற்சிப் பட்டரையை ஆரம்பித்து வைத்தாா்.
இதன் போது நாட்டிலுள்ள சகல அரச நிறுவனங்களின் நிதி அறிக்கைகள் மற்றும் அந்த நிறுவனங்களில் இடம்பெற்றும் ஊழல் மேசடி, முறையற்ற விதத்தில் அரச நிதியை முறையற்ற முறையில் கையாடல், அரச செத்துக்களை முறைகேடாக பயன்படுத்துதல் போன்ற விடயங்கள் கணக்காய்வாளா் அறிக்கைகள் தொடர்பிலும் இந்தப் பயிற்சி பட்டறையில் பயிற்சிகள் வழங்கப்பட்டது.
மேலும் இதன் போது எதிா்வரும் ஜனவரி 2016 ஆண்டில் ஜனவரி – மாா்ச் மாதம் வரையிலான 23 அமைச்சின் கீழ் உள்ள 23 அரச நிறுவனங்கள் நிதி அறிக்கை தொடர்பிலும் கலந்துறையாடப்பட உள்ளன கோப் குழுவில் அரச எதிா்க்கட்சி பாரளுமன்ற உறுப்பிணா்களும் அமைச்சா்களும் அங்கம் வகிக்கின்றனா். கடந்த ஆண்டின் கணக்கறிக்கைகள் ஆரயப்பட்டு ஊடகங்கள் ஊடாக அந் நிறுவனத்தின் ஊழல் மோசடிகள் வெளிப்படுத்தப்படும்.
இச் செயலமா்வில் பாராளுமன்ற உறுப்பிணா்கள் சுமந்திரன், மாவை சேனாதிராஜா, ரஞ்சன் ராமநாயக்க, தாயசிறி ஞாயசேகர லக்ஸ்மன் போன்ற உறுப்பிணா்கள் கலந்து கொண்டனா்.
அத்தடன் நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசாநாயக்க மற்றும் கோப் குழுவின் பணிப்பாளர்நாயகம் ஆர்.சேனசிங்க ஆகியோர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.