ஓட்டமாவடி அஹமட் இர்ஸாட்
இலங்கையின் சிறப்பு மிக்க தனியார் உயர் கல்வி நிறுவனமான BCAS Campus தொழில் நுட்ப மற்றும் உயர் கல்விக் கண்காட்சி ஒன்றினை BCAS Expo -2015 என்ற மகுடத்தில் ஏற்பாடு செய்து நடாத்தியது.
இந்த விசேட கண்காட்சி கடந்த நவம்பர் மாதம் 26, 27 மற்றும் 28 ஆம் திகதிகளில் இல: 256, காலிவீதி, கொழும்பு. 06 (வெள்ளவத்தை) இல் அமைந்துள்ள BCAS City Campus வளாகத்தில் காலை 09.00 மணிமுதல் மாலை 06.00 மணிவரை மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
மூன்று நாள் இடம்பெற்ற இக்கண்காட்சியின் முதலாவது நாள் நிகழ்வுக்கு Mr,Sooriya Bibile – Territory Manager Pearson UK அவர்கள் விசேட அதிதியாகக் கலந்து கொண்டு வைபவரீதியாக கண்காட்சியை ஆரம்பித்து வைத்தார்கள்.
அதேபோல் இரண்டாம் நாள் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக Mr.Anuradha Wijekoon – Additional Secretary – Non State Universities Ministry of Higher Education அவர்களும் Ms. Sujeewa Kariyawasam – Director non state higher education அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இந்நிகழ்வுகளில் சிறப்பு அதிதிகளாக BCAS Campus இன் தலைவர் பொறியியலாளர் அப்துர் றஹ்மான் அவர்களும் விசேட அதிதிகளாக BCAS Campus இன் முகாமைத்துவப் பணிப்பாளர்களும், கலந்து கொண்டனர்.
பொறியியல், கணினி மற்றும் உயிரியல் விஞ்ஞானம் உள்ளிட்ட பல்வேறு தொழில் நுட்பத் துறைகளில் உயர்கல்வி வாய்ப்புகளை வழங்கி வரும் BCAS Campus தனது மாணவர்களினால் உருவாக்கப்பட்ட புதுமையும், சுவாரஸ்யமும் நிறைந்த பல்வேறு தொழில் நுட்ப அம்சங்களை ( Innovative Technologies and Student projects) இதில் காட்சிப்படுத்தியதோடு உயிரியில் விஞ்ஞானத்துறை மாணவர்களின் விசேட செயற்திட்டங்களும் காட்சிப்படுத்தப்பட்டன. அத்தோடு இலவச இரத்தப் பரிசோதனை மற்றும் மருத்துவ ஆலோசனை என்பனவும் BCAS Campus இன் விஞ்ஞான பீடத்தினால் நடாத்தப்பட்டன.
BCAS Expo 2015 நிகழ்வில் மாணவர்களின் தொழில் வாய்ப்புக்களை பெற்றுக் கொடுக்கும் வகையில் தொழில் வழங்குணர்கள் பலரும் இதில் கலந்து கொண்டதோடு மாணவர்களின் உயர் கல்விக்கான கடன் திட்டங்களை வழங்கும் வங்கிகள் பலவும் இதில் கலந்து கொண்டன.
மேலும், வெளிநாட்டு உயர் கல்விக்கு வழிகாட்டும் இலவச ஆலோசனைப் பட்டறைகளும் இதில் இடம்பெற்றதுடன் இதில் இடம் பெற்ற போட்டி நிகழ்ச்சிகளிலும் சுவாரஸ்யமான போட்டிகளிலும் கலந்து கொண்டோருக்கு பரிசில்களும் நினைவுச் சின்னங்களும் அதிதிகளால் வழங்கி வைக்கப்பட்டன.
BCAS Campus நடாத்திய BCAS Expo -2015 கண்காட்சியைக் கண்டு களிப்பதற்கு பாடசாலை மாணவர்கள் ஆசிரியர்கள் பெற்றோர்கள் என ஏராளமானதானவர்கள் கலந்து கொண்டனர். குறிப்பாக தூரப்பிரதேசங்களிலிருந்தும் அதிகமானவர்கள் வருகை தந்திருந்தனர்.
BCAS Expo 2015 கண்காட்சிக்கு பிரதான அனுசரணையாளராக Pearson, இணை அனுசரணையாளர்களாக Dialog மற்றும் ஊடக அனுசரணையாளர்களாக வீரகேசரி, மெட்ரோ நியூஸ், டெய்லி மிரர், சன்டே டைம்ஸ் ஆகியன பங்கெடுத்திருந்தமை குறிப்பிடத் தக்கது.