முடிவுருத்தப்படாத வேலைகள் யாவும் இம்மாதம் 24 ஆம் திகதிக்கு முன்னர் முடியவேண்டும் : DS ஐ.எம்.ஹனீபா !

அபு அலா 

ds_Fotor

அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்டுவரும் சகல அபிவிருத்தி வேலைத்திட்டங்களும் இம்மாதம் 24 ஆம் திகதிக்கு முன்னர் முடிவுருத்தப்படவேண்டும் என அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் ஐ.எம்.ஹனிபா தெரிவித்தார்.

அட்டாளைச்சேனை பிரதேச அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல் பிரதேச செயலக கூட்ட மண்டபத்தில் இடம்பெற்றபோது மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

அம்பாறை மாவட்ட செயலகத்தின் கீழுள்ள 20 பிரதேச செயலகங்களில் அட்டாளைச்சேனை பிரதேச செயலக அபிவிருத்தி வேலைகள் மாத்திரம் இதுவரையும் முடிவுருத்தப்படவில்லை. இந்த வேலைகள் யாவும் இம்மாதம் 24 ஆம் திகதிக்கு முன்னர் முடியாவிட்டால் அவ்வேலைகளுக்கான அணைத்துவித பணங்களும் திருப்பியனுப்படும் என்று மாவட்ட செயலாளர் என்னிடம் கூறியுள்ளார்.

கடந்த ஆண்டுகளில் இடம்பெற்ற அபிவிருத்தி வேலைகள் யாவும் ஒரு வித்தியாசமான முறையில் இடம்பெற்றுவந்தன. இவ்வருடம் அவ்வாறில்லாமல் சகல அபிவிருத்திகளும் வருட இறுதிக்குள் முடிவுருத்தப்பட்டு எல்லா கணக்குகளும் வருட இறுதியில் பூச்சியம்” ஆக்கவேண்டும். அவ்வாறு முடிவுருத்தப்படாத வேலைகள் யாவும் இம்மாதம் 24 ஆம் திகதிக்கு முன்னர் முடியவேண்டும். அப்படி முடியாவிட்டால் அணைத்துவித பணங்களும் திருப்பியனுப்புவதற்கான நடவடிக்கைகளை எடுக்கவேண்டிவரும் அதற்கெற்றாப்போல் சகல அபிவிருத்திகளையும் மிக விரைவாக செய்து முடிக்கவேண்டும்.

அட்டாளைச்சேனை பிரதேச அபிவிருத்தி வேலைகளை முன்னெடுத்து வருகின்றவர்களின் குடும்பங்களில் யாராவது ஒருவரின் வீட்டில் ஒருவர் செத்துவிடுகின்றனர். அந்தளவு அட்டாளைச்சேனை பிரதேசத்தில் சாவு வீதம் அதிகமாக இடம்பெற்று வந்துள்ளது. இது அட்டாளைச்சேனை பிரதேசத்தின் துரதிஷ்டம் என்றுதான் நான் கூறுவேன் என்றார்.

அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் ஐ.எம்.ஹனிபா தலைமையில் இடம்பெற்ற அபிவிருத்தி கலந்துரையாடலில் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.முஹம்மட் நஸீர், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சரின் இணைப்பாளர் ஜெமில் காரியப்பர், பொதுமக்கள் தொடர்பாடல் அதிகாரி எம்.ஐ.எம்.நபில், அட்டாளைச்சேனை பிரசேத சபையின் முன்னாள் தவிசாளரும் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரின் இணைப்புச் செயலாளருமாகிய சட்டத்தரணி எம்.ஏ.அன்ஸில், பிரதேச செயலக திட்டமிடல் அதிகாரி, பிரதேச சபை மற்றும் பிரதேச செயலக தொழில் நுட்ப உத்தியோகத்தர்கள் மற்றும் ஒப்பந்தக்காரர்களும் கலந்துகொண்டனர்.