கல்முனை வீதி அபிவிருத்தி பணிகள் ஆரம்பம் !

ஹாசிப் யாஸீன், எம்.எம்.ஜபீர்

 

 கல்முனை மக்களின் நீண்ட கால குறையாகவிருந்த வரும் வீதி அபிவிருத்தி வேலைத்திட்டங்களை பிரதி அமைச்சர் ஹரீஸ்முன்னெடுத்து வருகின்றார்.

12314015_1179134495447972_2541667455954345460_n_Fotor

இதற்கமைவாக விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸின் முயற்சியினால் நெடுஞ்சாலைகள்அமைச்சின் 3 கோடி 90 லட்சம் ரூபா நிதி ஒதுக்கீட்டில் கல்முனை காசீம் வீதி காபட் வீதியாகவும், தைக்கா வீதி வடிகான்வசதிகளுடன் கொங்ரீட் வீதியாகவும் அபிவிருத்தி செய்யப்படவுள்ளது.

இவ்வீதிகளுக்கான வேலைகளை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு நேற்று வெள்ளிக்கிழமை (04) மாலை இடம்பெற்றது.

இந்நிகழ்வுகளுக்கு விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவருமானசட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

IMG_5828_Fotor

இதில் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பிரதம பொறியியலாளர் எம்.வீ.அலியார், முன்னாள் கல்முனை பிரதேச சபைஉறுப்பினர் எம்.ஐ.ஏ.சமட் உள்ளிட்ட கல்முனை அன்சார் சுன்னதுல் முஹம்மதிய்யா ஜூம்ஆ பள்ளிவாசல் நிர்வாகத்தினர், உலமாக்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து கல்முனை அன்சார் சுன்னதுல் முஹம்மதிய்யா ஜூம்ஆ பள்ளிவாசலில் கூட்டம் இடம்பெற்றது. இதில்பிரதி அமைச்சர் ஹரீஸின் இச்சேவையை பாராட்டி இப்பள்ளிவாசல் நிர்வாகத்தினரால் நினைவுச் சின்னம் வழங்கிகௌரவிக்கப்பட்டார்.

IMG_5824_Fotor