வங்காளதேசத்தில் திருவிழா கூட்டத்தில் குண்டுவெடிப்பு : 10 பேர் காயம் !

வங்காளதேசத்தில் இந்துக்களின் திருவிழா கூட்டத்தில் குண்டுவெடித்ததில் 10 பேர் காயமடைந்தனர். 

தலைநகர் டாக்காவில் இருந்து 415 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள தினஜ்பூர் மாவட்டத்தில் ருஷ்மேளா என்ற திருவிழாவுக்காக இந்து மக்கள் நூற்றுக்கணக்கில் கூடி இருந்தனர். அப்போது அந்த கூட்டத்தில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தன. இதனால் மக்கள் இடையே பெரும் பதற்றம் ஏற்பட்டது. 

இந்த குண்டுவெடிப்புகளில் 10  பேர் சிக்கி, படுகாயம் அடைந்தனர். தகவல் அறிந்ததும் மீட்பு படையினரும், போலீசாரும் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். படுகாயம் அடைந்தவர்களை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவர்களில் 5 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. 

இதுதொடர்பாக காஹலூர் போலீஸ் அதிகாரி அப்துல் மஜித் கூறுகையில், “ஏற்கனவே மதத்தின் பெயரால் கூட்டம் கூட்டக்கூடாது என கோவில் பூசாரிக்கு மிரட்டல்கள் வந்துள்ளன. அவற்றைத் தொடர்ந்துதான் இந்த குண்டுவெடிப்புகள் நடந்துள்ளன. இந்த தாக்குதல்கள் தொடர்பாக 5 பேரை பிடித்து விசாரணை நடத்துகிறோம்” என்றார்.