ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் அதிபராக முகமது புகாரி கடந்த மே மாதம் முதல் பதவி வகித்து வருகிறார். இதற்கு முன்பாக குட்லக் ஜோனாதன் என்பவர் பதவி வகித்து வந்தார்.
நைஜீரியாவில் அரசுக்கு எதிராக போகோஹாரம் தீவிரவாதிகள் செயல்பட்டு வருகின்றனர். வெடிகுண்டு வீச்சு, துப்பாக்கி சூடு, போன்ற வன்முறை சம்பவங்கள் மூலம் தினமும் ஆயிரக்கணக்கான பொதுமக்களை கொன்று குவிக்கின்றனர்.
பள்ளி மாணவிகள் மற்றும் இளைஞர்களை கடத்தி விற்பனை செய்கின்றனர். இவர்களின் அட்டூழியம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் போகோஹாரம் தீவிரவாதிகளை கட்டுப்படுத்த அமெரிக்க மற்றும் மேற்குலக நாடுகளை நைஜீரியா உதவிக்கு அழைத்தது. அதன்படி பல்வேறு நாடுகள் போகோஹாரம் தீவிரவாதிகளுக்கு எதிராக தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதில் கடந்த வாரம் இங்கிலாந்து ராணுவத்தினர் மேற்கொண்ட தாக்குதல் நடவடிக்கையில் 100 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாகவும், 900 பிணைக்கைதிகள் விடுதலை செய்யப்பட்டதாகவும் அந்நாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
”இங்கிலாந்து ராணுவத்தினால் இந்த அழிப்பு நடவடிக்கை கடந்த வாரம் நவம்பர் 26 முதல் 28 வரை நைஜீரிய எல்லைப்பகுதியில் நடத்தப்பட்டது. இதில் நூற்றுக்கும் அதிகமான தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.” என்று இங்கிலாந்து நாட்டின் பாதுகாப்பு துறை மந்திரி ஜோசப் அச்சோமோ தெரிவித்துள்ளார்.
மேலும் அவர்களிடம் இருந்து 900 பிணைக்கைதிகள் மீட்கப்பட்டதோடு, ஐஎஸ் தீவிராவாதிகளின் கொடிகளும் பறிமுதல் செய்யப்பட்டதாக அவர் கூறினார்.