வரவு செலவுத் திட்டத் திற்கு எதிராக சுதந்தி ரக்கட்சி வாக்களிக்கும் என ஜ.ம.சு.மு பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அழுத் கமகே நேற்று தெரிவித்தார். இதனை மனச்சாட்சியுள்ள சுதந்திரக் கட்சி அமைச்சர்களினால் ஆதரிக்க முடியுமா எனவும் அவர் குறிப்பிட்டார்.
வரவு செலவுத்திட்ட 2 ஆம் வாசிப்பு மீதான விவாதத்தில் உரையாற்றிய அவர் மேலும் குறிப்பிட்டதாவது, இந்த வரவு செலவுத்திட்டத்தில் வறிய மக்களினதும் மத்திய வர்க்கத்தினரதும் வயிற்றில் அடிக்கப்பட்டுள்ளது.மனசாட்சிக்கு ஏற்ப இந்த வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களிக்க முடியுமா என சுதந்திரக்கட்சி அமைச்சர்களை கேட்க விரும்புகிறேன். 100 அரசாங்கத்தின் வரவு செலவுத்திட்டத்திற்கு நாம் ஆதரவாக வாக்களித்தோம். இம்முறை சமர்ப்பிக்கப்பட்டுள்ள வரவு செலவுத்திட்டம் நாயை கொன்றாவது நிதி சேகரிக்கும் வகையில் முன்வைக்கப்பட்டுள்ளது.
மைத்ரி ஆட்சி வேலைத்திட்டத்திலுள்ள எந்த ஒரு அம்சமும் இதில் கிடையாது. இது முழுமையாக ஜ.தே.க. வரவு செலவுத்திட்டமாகும். இதற்கு சுதந்திரக் கட்சி ஆதரவு வழங்காது.