கடந்த வாரம் கோப்பாய் பகுதியை சேர்ந்த இ.செந்தூரன்(வயது18) என்ற பாடசாலை மாணவன் தமிழ் அரசிய ல் கைதிகளை விடுதலை செய்யக்கோரி தனது பாடசாலை கொப்பியில் கடிதம் ஒன்றை எழுதிவைத்து விட்டு புகைவண்டி முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டான்.
குறித்த சம்பவத்தின் பின்னர் குறித்த கடிதம் உயிரிழந்த மாணவனாலேயே எழுதப்பட்டது. என பெற்றோர், சகோதரர்கள் மற்றும் பாடசாலை நண்பர்கள் உ றுதிப்படுத்தியிருக்கும் நிலையில், அந்தக் கடிதம் தொடர்பான தகவல்களை தணிக்கை செய்ய அரசாங்கம் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது.
இதன் தொடர்ச்சியாக இந்த கடிதத்தை மாணவன் உயிரிழந்த பின்னர் போட்டோ கொப்பி எடுத்தார் என்ற குற்றச்சாட்டின் கீழ் இன்றைய தினம் யாழ்.கோண்டாவில் பகுதியைச் சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தை ஒருவரை கோப்பாய் பொலிஸார் விசாரணைக்குட்படுத்தியிருக்கின்றனர். எனினும் குறித்த கடிதத்தில் மாணவன் தொடர்பான தகவல்கள் இருந்தமையினால் அதனை மற்றவர்கள் அறிந்துகொள்ளவே தாம் கடிதத்தை போட்டோ கொப்பி எடுத்ததாக மேற்படி குடும்பஸ்த்தர் பொலிஸாருக்கு தெரியப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படும்.
இந் நிலையில், விசாரணைக்குட்படுத்தப்பட்ட குடும்பஸ்த்தர் தொடர்பான தகவல்களை பொலிஸார் வெளியிடவில்லை. என்பது குறிப்பிடத்தக்கதாகும்.