பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஐ.எஸ். தீவிரவாதிகள் நடத்திய தொடர் தாக்குதல்களில் 130 பேர் பலியாகினர். 352 பேர் காயம் அடைந்தனர்.
இத்தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பெல்ஜியத்தைச் சேர்ந்த தீவிரவாதி அப்துல் ஹமீது சிரியாவில் அமெரிக்க குண்டு வீச்சில் கொல்லப்பட்டான். மேலும் 8 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இவர்கள் தவிர பெல்ஜியத்தைச் சேர்ந்த சலா அப்தெஸ்லாம் (30) என்பவனும் தாக்குதலில் ஈடுபட்டது தெரிய வந்தது. எனவே, அவனை பிடிக்க போலீசார் தீவிர வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
ஆனால் அவன் சிரியாவுக்கு தப்பி ஓடிவிட்டது தற்போது தெரிய வந்துள்ளது. தாக்குதலுக்கு பிறகு பெல்ஜியம் எல்லையில் இவன் 3 முறை பயணம் செய்த போது போலீசாரிடம் சிக்கினான். அப்போது அவன் மீது போலீசாரின் சந்தேக பார்வை இல்லை. எனவே அவன் தப்பிவிட்டான்.