இன்னும் இறுதி இணக்கப்பாட்டுக்கு வரவில்லை!

ஊழியர் சேமலாப நிதி மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதி ஆகியவற்றை இணைப்பது குறித்து இதுவரை இறுதி இணக்கப்பாட்டுக்கு வரவில்லை என, பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார். 

Ranil1

இன்று இடம்பெறும் வரவு செலவுத்திட்ட இரண்டாவது வாசிப்பின் மீதான விவாதத்தின் போதே அவர் இவ்வாறு கருத்து வௌியிட்டுள்ளார். 

குறித்த இரண்டு நிதிகளையும் ஒன்றாக இணைப்பது தொடர்பில் அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளமை குறித்து, முன்னதாக இடைக்கால அரச பொருளாதாரக் கொள்கை வௌியீடு மற்றும் வரவு செலவுத்திட்ட வாசிப்பின் போதும் அறிவித்ததாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

எதுஎவ்வாறு இருப்பினும் இந்த நடவடிக்கைக்கு தொழிற்சங்க பிரதிநிதிகள் பாரிய எதிர்ப்பை வௌியிட்டுள்ளதாகவும், இதனால் அவர்களுடன் இது பற்றி தொடர்ந்தும் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு வருவதாகவும் பிரதமர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.