வங்காளதேச முன்னாள் பிரதமர் கலிதாஜியா. வங்காளதேச தேசிய கட்சி தலைவர். தற்போது எதிர்க்கட்சி தலைவராக இருக்கிறார். இவர் மீது பல ஊழல் வழக்குகள் உள்ளன.
இவர் பிரதமராக இருந்தபோது ஒரு கனடா கம்பெனிக்கு எரிவாயு வயலை குத்தகைக்கு விட்டதில் ஊழல் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அந்த நிறுவனத்துக்கு காண்டிராக்ட் விட்ட வகையில் நாட்டுக்கு ரூ.13,777 கோடி இழப்பு ஏற்பட்டதாக புகார் கூறப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க வேண்டும் என்று ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்து இருந்தார். அதை விசாரித்த கோர்ட்டு மனுவை தள்ளுபடி செய்தது. மேலும் கோர்ட்டு உத்தரவு கிடைத்த 2 மாதத்திற்குள் கோர்ட்டில் சரண் அடைய வேண்டும் என உத்தரவிட்டது.
அதைத்தொடர்ந்து நேற்று அவர் டாக்காவில் உள்ள ஐகோர்ட்டில் சரண் அடைந்தார்.