நாட்டின் பாதுகாப்பிற்கு குந்தகம் ஏற்படும் எவ்வித நடவடிக்கையிலும் ஈடுபடப்போவதில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று பரிசிலுள்ள இலங்கையர்களை சந்தித்த போது தெரிவித்தார்.
இதேவேளை,உலக காலநிலை மாற்றம் தொடர்பிலான உச்சிமாநாடு அரச தலைவர்களின் பங்குபற்றுதலுடன் பிரான்சில் இன்று ஆரம்பமாகவுள்ளது.
இந்த மாநாட்டில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்துக் கொள்ளவுள்ளார்.
இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா, சீன ஜனாதிபதி உள்ளிட்ட 183 நாடுகளின் அரச தலைவர்கள் பாரிசின் லொக்கோச்சி நகருக்கு வருகை தந்துள்ளார்கள் .
பாரிஸ் நகர் மீது அண்மையில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை அடுத்து இந்த மாநாட்டு நடைபெறுவதால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
புவி வெப்பமாதல், பனிப்பாறைகள் உருகுதல், சமுத்திரத்தின் நீர் மட்டம் உயர்தல் போன்றவற்றை அடிப்படையாக கொண்டு இம்முறை கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.