2016 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் கண்டிப்பாக தோற்கடிக்கப்பட வேண்டிய ஒன்று என ஜே. வி. பி.யின் தொழிற்சங்க முக்கியஸ்தர் லால்காந்த விமர்சித்துள்ளார்.
இதுதொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள லால்காந்த,
கடந்த மஹிந்த அரசின் முதலாவது வரவு செலவுத் திட்டம் முன்வைக்கப்பட்ட 2006 ம் ஆண்டு தொடக்கம் 2014ம் ஆண்டு வரை தொழிலாளர்களுக்கு ஊதியம் அல்லது கொடுப்பனவுகளை அதிகரித்துக் கொள்வதில் நாங்கள் மேற்கொண்ட முயற்சிகள் வெற்றி கண்டிருந்தது.
ஆனால் இந்தத் தடவை முன்வைக்கப்பட்டுள்ள வரவு செலவுத் திட்டத்தில் பத்து ஆண்டுகளின் பின்னர் தொழிலாளர் நலன் பேணும் எதுவித திட்டங்களும் இல்லை. அதற்குப் பதிலாக ஓய்வூதியத்தையும் ஒரு பாரமாக இந்த அரசு வரவு செலவுத் திட்டத்தில் குறிப்பிட்டுள்ளது.
இனிவரும் காலங்களில் ஓய்வூதியம் என்பது அவரவரின் ஊதியத்தில் பிடித்தம் செய்யப்பட்ட தொகையை மட்டும் வழங்கும் வகையில் மாற்றியமைக்க ப்பட்டுள்ளது. இதெல்லாம் தொழிலாளர் நலனை பாதிக்கும் விடயங்களாகும். எனவே கட்சி பேதமின்றி எல்லா தொழிற்சங்கங்களும் இந்த வரவு செலவுத் திட்டத்தை தோற்கடிக்க முன்வர வேண்டும் என்றும் லால்காந்த அழைப்பு விடுத்துள்ளார்.