எதிர்வரும் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் ஒரு சிலரால் தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க ஆதங்கம் தெரிவித்துள்ளார்.
சிங்கள வார இதழுக்கு அளித்துள்ள நேர்காணலில் அமைச்சர் ரவி கருணாநாயக்க இதனைத் தெரிவி த்துள்ளார்.
தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர், நாம் முன்வைத்துள்ள வரவு செலவுத்திட்டத்தை தவறாக விளங்கிக் கொண்டுள்ளவர்களே அதனை எதிர்க்கின்றனர்.
உரமானியம் நிறுத்தப்பட்டுள்ளதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டை எடுத்துக்கொண்டால் உரியவர்களுக்கு மாத்திரம் அதனை வவுச்சர் முறையில் வழங்க நடவடிக்கை
எடுத்துள்ளோம். மற்றப்படி முற்றாக அதனை நிறுத்தவில்லை. இதே போன்றுதான் ஏனைய விமர்சனங்களின் நிலையும். அரசாங்கம் பொதுமக்களுக்கு நிவாரணங்களை அளித்தாலும் ஒரு சிலருக்கு அதனை ஏற்றுக்கொள்ள முடிதில்லை. அதே நேரம் நிவாரணங்கள் அளிக்கப்படாவிட்டாலும் அதனை பெரிய பிரச்சினையாக்க முயற்சிப்பார்கள்.
இவ்வாறான பொறாமை உணர்வு கொண்ட அரசியல்வாதிகளே வரவு செலவுத் திட்டத்தை எதிர்க்கின்றனர்.
ஆனால் சரியான முறையில் இதனை விளங்கிக் கொண்டவர்கள் ஒருபோதும் எதிர்ப்புத் தெரிவிக்க மாட்டார்கள் என்றும் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.