அஸ்மி ஏ கபூர்
நெஞ்சுக்குள் தீ விழுந்து; நினைவல்லாம் வசமிழந்து;பஞ்சு படு பாடுபட்டோம் பாவலனே எம் தலைவா,எம்மை விட்டு பிரித்தானோ’ஏகன் உம்மை அழைத்தானோ’கண்ணாண கண்மணியே ஆராரோ முகம்மது அஷ்ரபே தாலேலோ.
——————————
ஞாபகமிருக்கிறதா? விடை காண முடியாத ஒரு சமுகத் தலைவனின் மரணச் சேதி.தலைவர் என்று மார்தட்டி இன்றும் அவரால் அவர் உணர்வுகளால் பதவிகளையும், பட்டங்களையும், மேடைகளையும், மாலைகளையும் சுமக்கிறோமே, எத்தனை அமைச்சர்கள், எத்தனை பிரதிகள், எத்தனை மந்திரிமார் இருக்க அந்த தலைவனை சதி செய்து மரணிக்க செய்தாரே எனும் எம்மக்களின் கேள்விக் கணைகளுக்கப்பால் எந்த வொரு கேள்வி கணக்குமின்றி ஒரு தலைவனின் மரணத்தை ஒரு அனாதையை போல் கை கழுவி விட்டீரே.
1996ம் மாண்டு இடம் பெற்ற கொலைச்சம்பவத்திற்காக அமைச்சரொருவர் விளக்கமறியல் செல்கிறார்.
முதலமைச்சராக இருந்தவர்கல்லாம் தடுப்புக்காவலில் வைக்கப்படுகிறார்கள்
பிரதிப் பொலிஸ் மா அதிபரொருவருக்கு மரண தண்டைன விதிக்கப்படுகிறது
நல்லாட்சி யில்
எமது சமுகத்தை துயர் படிந்த காலத்திலிருந்து மீட்டு வாழ்வளித்த எம்மை அடையாளப்படுத்திய தலைவனின் மரணம் தொடர்பாக ஒரு விசாரணை கொமிசன் கூட வைக்க முடியாமல் போனது ஏனோ;
தலைவருடைய மனைவி அதிகாரத்திலுள்ள போது பேசவில்லை
அவர்தம் வழி என்றோர் பேசவில்லை
அவரை வைத்து போஸ்டர்கள் அடிப்போர் பேசவில்லை
அவருக்காக கட்சியிலுள்ளோம் என்போர் பேசவில்லை
மக்களும் மெளனிகளாக பேசமால் வாழ்கிறோமே….
உள்ளத்திலிருந்து உதித்த உண்மையாளர்களாக அஷ்ரப் என்கின்ற ஒரு தலைமை மண்ணோடு மண்ணாகி
நாம் நடுத்தெருவில் விடப்பட்டிருக்கிறோமே? அந்த சதி கார சூழ்ச்சியை கூட அறிய எம்மால் முடியவில்லை
இதற்க்குள்தான் நாம் வேண்டி நிற்க்கும்
கரையோர மாவட்டம்
தென்கிழக்கு அலகு
முஸ்லீம் சுயாட்சி
சம உரிமை
தனித்துவம்
மீள் குடியேற்றம்
தனித்தரப்பு
வெட்கமாக இல்லையா? இந்த நல்லாட்சி யிலாவது தலைவனின் மரணம் தொடர்பில் கரிசனை கொள்ளமாட்டார்களா?
அவ்வாறு தலைவர்கள் என் போர் எதுவுமே செய்ய வில்லை முயற்ச்சிக்கவில்லை எனின் நாமும் ஒரு முடிவுக்கு வரலாம்.கண்களே கண்களே திறவாதே…எம் கனவுகளை நீ கலையாதே