மோல்டாவில் இன்று பொதுநலவாய உச்சி மாநாடு , ஜனாதிபதி தலைமையிலான குழுவினர் பங்கேற்பு !

பொதுநலவாய நாடுகளின் உச்சி மாநாடு இன்று 27 ஆம் திகதி மோல்டோவில் நடைபெறவுள்ளதுடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இம் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக நேற்று 26 ஆம் திகதி மோல்டாவிற்கான விஜயத்தினை மேற்கொண்டார்.

maithri pala shrines with his wife

இம் மாநாட்டில் 53 நாடுகளைச் சேர்ந்த அரச தலைவர்கள் மற் றும் அந் நாடுகளின் உயர் மட்டத் தூதுக் குழுக்களும் கலந்துகொள்ளவுள்ளன.

கடந்த தடவை பொதுநலவாய நாடுகளின் உச்சி மாநாடு இலங்கையில் நடைபெற்றது. பொது நலவாய நாடு களின் அரச தலைவர்கள் மாநாடு கொழும்பிலும் ஏனைய துறை சார்ந்த அமைச்சர்கள் மட்ட மாநாடு அம்பாந் தோட்டை, காலி போன்ற மாவட்டங் களிலும் சிறப்பாக இடம்பெற்றன.

இம் மாநாடு வர்த்தக பொருளாதார ரீயிலும் நாடுகளுக்கிடையிலான உறவுக ளைப் பலப்படுத்தவும் உறுதுணையாய் அமைந்தமை குறிப்பிடத்தக்கது.

இம்முறை மோல்டாவில் நடைபெற வுள்ள பொதுநலவாய நாடுகளின் உச்சி மாநாட்டில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் அமைச்சர்கள், வர்த்தகம் உட்பட பல்வேறு துறைசார்ந்த முக்கியஸ்தர்களும் கலந்து கொள்கின்றனர்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்படி மாநாட்டில் பங்கேற்பதுடன் மாநாட்டில் கலந்துகொள்ளும் சர்வதேச தலைவர்களையும் சந்தித்து பேச்சுவார்த் தைகளை நடத்தவுள்ளார்.

அத்துடன் மோல்டாவின் ஜனாதிபதி மற்றும் பிரதமர் உட்பட அந்நாட்டின் அமைச்சர்கள் பலரையும் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளார். சுற்றுலாத் துறையில் முக்கியத்துவம் வாய்ந்த நாடு மோல்டா என்பதால் இரு நாடு களுக்குமிடையில் சுற்றுலா, வர்த்தகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் முன் னேற்றம் தொடர்பில் இதன்போது கவனம் செலுத்தப்படவுள்ளது.

மோல்டாவிற்கான விஜயத்தை மேற்கொள்ளும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று 27 ஆம் திகதி முதல் 29 ஆம் திகதி வரையிலான மோல்டா விஜயத்தை முடித்துக் கொண்டு பிரான்ஸ் நாட்டுக்கான விஜய மொன்றை மேற்கொள்ளவிருந்த போது அந்நாட்டில் கடந்த சில வாரங்களாக நிலவும் மோசமான சூழ்நிலை காரணமாக இவ்விஜயம் தற்காலிகமாக ரத்தாகலாம் என் றும் எதிர்பார்க்கப்படுகிறது.

மோல்டா தெற்கு ஐரோப்பாவின் மத்திய தரைக் கடலில் அமைந் துள்ள ஒரு மக்கள் தொகை அடர்த்தியான தீவு ஆகும்.

மோல்டா ஏழு தீவுகளை உள் ளடக்கிய நாடு. லிபியாவுக்கு வடக்கே அமைந்துள்ள இந்த நாட்டின் உத்தியோகபூர்வ மொழி மோல்ட்டீஸ் மற்றும் ஆங்கில மொழிகளாகும். உரோமன் கத்தோலிக்க மதமே இங்கு மக்களால் பெரும்பாலும் பின்பற்றப்படும் மதமாகவும் விளங்குகிறது.

மோல்டா ஐக்கிய இராச்சியத்திலிருந்து 1964 செப்டம்பரில் சுதந்திரம் பெற்று 1974 டிசம்பரில் குடியரசாக அங்கீகரிக் கப்பட்ட நாடு. 2004 மே மாதம் ஐரோ ப்பிய ஒன்றியத்தில் இணைந்துள்ளது.

316 கிலோ மீற்றர் பரப்பளவைக் கொண்ட இந்நாட்டில் 402,000 மக்கள் வாழ்கின்றனர்.

மோல்டாவின் தலைநகரம் வலெட்டா. இது மோல்டா தீவின் மத்திய கிழக்குப் பகுதியில் அமைந்துள்ளதுடன் 16 ஆம் நூற்றாண்டில் நிர்மாணிக்கப்பட்ட கட் டடங்களைக் கொண்டுள்ளது. இது உலக பாரம்பரிய கலைகளில் ஒன்றாக யுனெஸ் கோவினால் பிரகடனப்படுத் தப்பட்டுள்ளது.

மோல்டாவில் உள்ள தொடர்ச்சியான வரலாற்றுக்கு முந்தைய நினைவுச் சின் னங்களில் பெருங்கற் தூண் கோவில்களை குறிப்பிடலாம். இவற்றில் ஏழு சின்னங்கள் யுனெஸ் கோவின் உலக பாரம்பரிய களங் களாக அறிவிக்கப்பட்டவை.

இந்த பெருந்தூண் வளாகங் கள் கலாசார மாற்றத்தின் கண்டுபிடிப்புகள் என தொல் பொருள் ஆய்வாளர்கள் குறிப் பிட்டுள்ளனர். அங்குள்ள தாசியன் கோவில் வளாகம் கி. மு. 2500 வரை உபயோகத்தில் இருந்ததாயினும் அதன் பின் னர் கோயில் கட்டும் கலாசா ரம் மறைந்து விட்டது.

மோல்டா ஜனாதிபதியாக எட்வேட் அடாமியும் பிரதமராக லோரன்ஸ் கொன்சியும் பதவி வகிக்கின்றனர். யூரோ நாண யமே இந்நாட்டில் புழக்கத்தில் உள்ளது. கண்டிஜா என்பது மோல்டா நாட் டின் பழைமை வாய்ந்த இராட்சதக் கோபு ரம், இது மத்திய தரைக் கடற் பகுதியில் உள்ளது. இதனோடு இணைந்ததாக புதிய கற்காலத்தைச் சேர்ந்த இரண்டு கோவில்கள் உள் ளன. இவை 5000 ஆண்டுக ளுக்கு மேல் பழைமை வாய்ந்தவை. மிகப் பழைய தனித்துவம் மிக்கதும் சமை யம் சார்ந்துமாக இது திகழ்கிறது.

எகிப்தின் பிரமிட்டுக்கள் மற்றும் இங்கிலாந்தின் ஸ்ரோன் ஹெஞ்ச்சைவிட பழைமையானவை.

மோல்டா மொழியில் கண்டிஜா என்பது “பூதங்களுக்கு உரியது” என்பதே பொருள். அந்நாட்டில் நிலவும் கதைக ளின்படி இக்கோயில்கள் பண்டைய காலத்தில் இத்தீவில் வாழ்ந்த பூதங்களால் கட்டப்பட்டவை என்றும் இக்கோவில் அந்தப் பூதங்களால் காவல் கோபுரங்க ளாக பயன்படுத்தப்பட்டுள்ளன.

பெரும ளவு விலங்குகளின் எலும்புகள் இங்கி ருந்து கண்டெடுக்கப்பட்டிருப்பதால் இக்கோயில்களில் விலங்குகள் பலிகொடுக் கப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது. அதனை உறுதிப்படுத்தும் வகையில் ஆடு, செம்மறி ஆடு, பன்றி போன்ற விலங்குகளின் சிற்பங்களும் இங்கு காணப்படுகின்றன. இத்தகைய சிறப்பு களைக் கொண்ட மோல்டா தீவிலேயே இம்முறை பொதுநலவாய நாடுகளின் உச்சி மாநாடு நடைபெறுகிறது.

இது நாடுகளுக்கிடையிலான நல்லுறவைப் பலப்படுத்த உறுதிணையாய் அமைவதுடன் பொது நலவாய நாடுகள் எதிர்கொள்ளும் பொதுவான பிரச்சினைகள் தொடர்பில ஆராய்ந்து தீர்வு காணவும் வழிவகுக்கும். பொதுநலவாய நாடுகளின் முன்னேற்றம் அபிவிருத்தி மற்றும் எதிர்காலத்தில் ஒத்துழைப்புடன் செயற்படுதல் போன் றவை தொடர்பிலும் கவனம் செலுத்தப் படவுள்ளது.