சீனித் தொழிற்சாலைகளை அமைக்கும் நிறுவனங்களின் நோக்கம் மக்களைப் பற்றியது அல்ல : எஸ்.எம்.சபீஸ்

 

சப்றின்

 

சீனித் தொழிற்சாலைகளை அமைக்கும் நிறுவனங்களின் நோக்கம் மக்களைப் பற்றியது அல்லஇ சீனி உற்பத்தியின் போது கிடைக்கப் பெற்றும் ஸ்ப்ரிட் எனும் பதார்த்தமே அவர்களது குறிக்கோள். இவ்வகையான ஸ்பிரிட் சாராய உற்பத்திக்கு அதிகம் தேவைப் படுவதனால் அவர்களின் நோக்கம்  அதுவாகவே இருக்கும்.கடந்த காலங்களில் கரும்புப் பயிர் செய்தவர்களை இந் நிறுவனக்கள் நட்டத்தில் விட்டுவிட்டுச் சென்றதை நாம் நினைவுபடுத்த விரும்புகிறோம் என தேசிய காங்கிரசின் உயர்பீட உறுப்பினரும், அக்கரைப்பற்று மாநகரசபையின் முன்னாள் உறுப்பினருமான எஸ்.எம்.சபீஸ்  தெரிவித்தார். 

 

Safees

 

அம்பாரை மாவட்டத்தில் கரும்புச் செய்கையாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக ஆராயும் கூட்டம் அக்கரைப்பற்றில் அண்மையில் இடம்பெற்றபோதே மேற்படி கூறினார்.

 

அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில் –

20 வருடங்களாக வேளாண்மை செய்யப்பட்டு வந்த காணிகளில் உள்நாட்டு சீனி உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என்ற புனைப் பெயரில்  கரும்புப் பயிர் செய்கைக்கு பலவந்தமாக கொண்டுவரப்பட்டார்கள். இத்திட்டத்தினை தேசிய காங்கிரஸ் தலைவர்  ஏ. எல். எம். அதாஉல்லா பகிரம்கமாக எதிர்த்தார். தயரத்னவோடு வாக்குவாதப்பட்டு தனது கையில் இருந்த கோவைகளை அவரது முகத்தில் வீசி எறிந்தார். உள் நோக்கத்தோடு இயங்கிய இனவாதிகள் அதிகளவான கரும்புக்காணிகள் முஸ்லிம்கள் வசம் கைமாறிவிட்டதனையும் இந்நிலை தொடர்ந்தால் எஞ்சியுள்ள காணிகளையும் சிங்கள மக்கள் விற்று விடுவார்கள். இப்படி ஒருநிலை தோற்றுவிக்கப்பட்டால் சிங்களக் குடியேற்றங்கள் தடைப்பட்டு  விடும் என்ற நோக்கில் விடாப்பிடியாக கரும்புப் பயிர் செய்கையை அமுல்படுத்தினார்கள். பல ஏழை விவசாயிகள் தமது கையில் இருந்த  முதலையும் சிலர் வங்கிகளில் அடமானம் வைத்து எடுத்த பணத்தையும் கொண்டு கரும்பினை பயிர் செய்தனர். 

 

தேசிய காங்கிரஸ் தலைவர் ஏ.எல்.எம்.அதாஉல்லா எதிர்வு கூறியது போன்று ஆரம்பத்தில் அறுவடை செய்யப்பட்ட கரும்புகளை கொள்வனவு செய்த நிறுவனம் தமக்குத் தேவையான அளவு  ஸ்பிரிட்யை தயார் செய்து முடித்தவுடன் கரும்புக் கொள்வனவை நிறுத்தி விட்டது. மீண்டு வருகின்ற வருடம் 3ம் மாதம் மீண்டும் கொள்வனவு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கையில் இருந்ததை எல்லாம் மண்ணில் போட்டு விட்டு நாட்டியதை வெட்ட முடியாமலும்இ வெட்டியதை விற்க  முடியாமலும்  மனவேதனையில் கண்ணீரால் ஆடைகளை நனைத்துக் கொண்டிருக்கும் விவசாயிகளுக்கு யார் பதில் சொல்வது? பதில் கேட்டுப் போனவர்களை பணம் வாங்கிக்குத்தானே  வாக்களித்தீகள் என திருப்பியும் அனுப்பி உள்ளார்கள்.  

 

சகல சுகபோகங்களையும் அனுபவிக்கும் அமைச்சர்களுக்கு  ஏழை மக்கள் அனுபவிக்கும் வேதனைகள் உங்கள் மனங்களில்  சிறிதளவேனும் கரிசனையை உண்டுபண்ண வில்லையா? தேர்தல்கால அரசியல்வாதிகளிடம் முறையிட்டுப் பலன் கிடைக்கப்போவதில்லை.  விவசாயிகளே உங்கள் கரும்புகளை வெட்டுங்கள் நடுவீதிக்கு கொண்டு சென்று பாதையை மறித்து நிரப்புங்கள் நியாயம் கிடைக்கும் வரைப் போராடுங்கள் அநீதியை வெல்வது உங்கள் கைகளிலேயே உள்ளது என அவர் மேலும் கூறினார்.