ஊட்டச்சத்துள்ள உணவுகளைத் தயாரித்து உபயோகித்தல் தொடர்பான செயலமர்வு !

 ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ் 

 
நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஆரோக்கியமான ஊட்டச்சத்துள்ள உணவுகளைத் தயாரித்து உபயோகித்தல் தொடர்பான செயலமர்வும், விளிப்புணர்வுக் கருத்தரங்கும் நேற்று நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரி காரியாலய கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது.

 

சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர்.திருமதி.பறூஸா நக்பர் தலைமையில் இடம் பெற்ற இந்நிகழ்வுகளில் நிந்தவூர்ப் பிரதேசத்திலுள்ள பாலர் பாடசாலை ஆசிரியைகள், மாதர் அமைப்புக்களிலுள்ள யுவதிகள், இளைஞர் கழக யுவதிகள் எனப் பலரும் இதில் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.

 

IMG_8534_Fotor

‘எதிர்காலச் சந்ததியினரை ஆரோக்கியமான, சிறந்த ஒழுக்கவிழுமியமும், உற்பத்தித்திறனுமுள்ள சமூதாயமாக உருவாக்க வேண்டுமெனில் சிறுபராயத்திலிருந்தே சிறந்த உணவுப் பழக்க வழக்கங்களை ஊட்ட வேண்டும். அதற்காக பாலர் பாடசாலை ஆசிரியைகள் முதல் வீட்டிலுள்ள ஆச்சி, பாட்டி வரை ஒத்துழைப்பு நல்க வேண்டும்’ எனத் தெரிவித்த வைத்திய அதிகாரி திருமதி.பறூஸா நக்பர் தொடர்ந்தும் ‘சிறுவர்களுக்கான ஊட்டச் சத்துக்கள் எவை? அவற்றை சிறுவர்கள் விரும்பும் சுவையுடையதாக எவ்வாறு தயாரிக்க வேண்டும்? சத்துணவுகளை சிறுவர்களுக்கு வழங்குவதால் ஏற்படும் நன்மைகள்? சத்துணவுகள் மூலம் உருவாக்கப்படும் ஆரோக்கியமான சமூகத்தினரால் நாடு எவ்வாறு வளம் பெறுகிறது? போன்ற நல்ல பல முக்கிய விடயங்கள் தெளிவுபடுத்தப்பட்டன.

IMG_8535_Fotor

சிரேஷ்ட மருத்துவமாது திருமதி.பேகம் பீவி, மற்றும் பொது மருத்துவ மாதுக்களான எம்.எஸ்.மாஹிறா, ஏ.ஜெமீலா, திருமதி.பஸீஹா றியாஸ் போன்றோர்களினால் சிறப்பாகத் தயாரிக்கப்பட்ட உண்மையான சத்துணவுக் கோபுரமொன்றும் காட்சிப்படுத்தப்பட்டது. இதில் சுமார் 60க்கு மேற்பட்ட அசல் சத்துணவுகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தமை ஒரு சிறப்பம்சமாகும் என்று எமது பிராந்திய செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

IMG_8536_Fotor