பாரீஸ் பருவ நிலை மாற்றம் மாநாட்டில் பிரதமர் மோடியை அமெரிக்க அதிபர் ஒபாமா சந்திக்கிறார் !

modi obama

 பாரீசில் நடைபெறும் பருவநிலை மாற்றம் மாநாட்டின் போது பிரதமர் நரேந்திர மோடியுடன் அமெரிக்க அதிபர் ஒபாமா சந்தித்து பேசுகிறார்.

பிரான்ஸ் தலைநகர் பாரீசில் வருகிற 30–ந்தேதி பருவநிலை மாற்றம் குறித்த உச்சி மாநாடு தொடங்குகிறது. அதில் அமெரிக்க அதிபர் ஒபாமா, பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபர் ஸி ஜின்பிங் உள்ளிட்ட சர்வதேச நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கின்றனர்.

மாநாட்டின் முதல் நாளன்று அமெரிக்க அதிபர் ஒபாமா கலந்து கொள்கிறார். அவர் மாநாட்டின் இடையில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசுகிறார்.

மேலும், சீன அதிபர் ஸி ஜின்பிங்கையும் சந்திக்கிறார். இத்தகவலை வெள்ளை மாளிகையில் இருந்து அமெரிக்காவின் துணை தேசிய பாதுகாப்பு ஆலோசகர் டென் ரோத்ஸ் தெரிவித்துள்ளார்.

பருவ நிலை மாற்றம் குறித்து பலமான சர்வதேச ஒப்பந்தம் ஏற்பட இந்தியா, சீனா, பிரான்ஸ் உள்ளிட்ட முக்கிய நாடுகளின் தலைவர்களை அவர் சந்திக்க இருப்பதாக கூறினார்.