அரசாங்கம் தகுதியுடைய அனைத்து மாணவர்களுக்கும் வெட்டுப் புள்ளி இன்றி பல்கலைக் கழக அனுமதியினை வழங்க வேண்டும் !

 பல்கலைக் கழக மாணவர்களின் போராட்டம் தொடர்பாக எஸ் எம் சபீஸ் அவர்களைத் தொடர்பு கொண்டு கேட்டபோது , அவர் அளித்த விளக்கம் பின்வருமாறு,

 

 பல்கலைக் கழக மாணவர்கள் தொடர்ச்சியாக தனியார் பல்கலைக் கழகம் உருவாக்கப் படுவதற்கு எதிர்ப்புத்தெரிவித்து போராட்டங்களை நடாத்தி வருகின்றனர் எதிர்பவர்கள் கூறுவது என்ன ? தனியார் கைகளில் பல்கலைக் கழகங்கள் சென்றடையும்போது பணத்துக்காக கல்வி விற்கப்படும் ஏழைமானவர்கள் பாதிக்கப் படுவர் தரம் சரியானதாக இருக்குமா? என்பதே பிரதான குற்றச்சாட்டாக முன்வைக்கப் படுகிறது ஆதரிப்பவர்களின் கூற்று இவ்வாறு இருக்கிறது .

safees

 1 அல்லது 2 மார்குகளால்அரச பல்கலைக் கழகம் செல்ல முடியாத நிலையில் நாங்கள் பட்டம் பெறக் கூடாது என்று நினைப்பது நியாயமா? ஏழை மாணவர்கள் மாத்திரம்தானா அரச பல்கலைக் கலகத்துக்கு தெரிவாகின்றனர், இல்லையே: 100க்கு 10% ன மாணவர்கள் மாத்திரம்தான் வசதி குறைந்த மாணவர்களாக இருக்கின்றனர் கல்வித்தரம் சரியான முறையில் கடைப்பிடிக்கப் படுகிறதா என்பதனை உறுதிப் படுத்துவது அரசாங்கத்தின் கடமை என வாதிடுகின்றனர் இப்போராட்டங்களில் சுயநல போக்குகள் அதிகம் காணப்படுகிறது என பொதுமக்கள் கூறுகின்றனர்.

 

 எவ்வாறென்றால் அரச பல்கலைக் கழகங்களில் பட்டம் பெறுகின்ற பட்டதாரிகளுக்கு பெரும்பாலும் அரசாங்கத் தொழில் கிடைகின்றது இந்நிலையில் தனியார் கல்லூரிகளில் பட்டம் பெறுகின்றவர்கள் போட்டிக்கு வந்து விடுவார்களோ என்ற பயமே முக்கிய காரணம் என அவதானிகள் கருத்தில் இருந்து பொதுமக்கள் கூறுகின்றனர் ஏனென்றால் பங்களதேஸ் ரஷ்யா போன்ற நாடுகளில் தனியார் பல்கலைக் கழகங்களில் பட்டம் பெற்ற வைத்தியர்கள் நமது நாட்டில் உள்ள நடைமுறைகளைப் பின்பற்றி தொழில் பெறவில்லையா? எனக் கேக்கின்றனர்.

 

 இவ்வாறு இருக்கும் போது நமது நாட்டில் உள்ள இளைஜர்கள் போட்டிப்பரிட்சையின் மூலம் வெட்டுப்புள்ளிக்கு அமைவாக இலவசக் கல்வி கற்பதற்கு பல்கலைக் கழகத்துக்கு தெரிவாகும் போது , தகுதி இருந்தும் தெரிவாகாத மற்றைய மாணவர்கள் பட்டம் பெறுவதற்கான வாய்ப்புக்களை உருவாக்கிக் கொடுப்பது அரசாங்கத்தின் கடமைகளில் ஒன்றாகும் என்பதனை நாம் மறந்து விட முடியாது இன்று பல்லாயிரக் கணக்கான மாணவர்கள் வெளிநாடுகளுக்கு கல்வி கற்க செல்கின்றனர் .

 

 இதனால் ஏற்படும் செலவுகளை நாம் சிந்திக்க வேண்டும் சகல தகுதியுடைய மாணவர்களுக்கும் பட்டப்படிப்பு பெறக் கூடிய வாய்ப்புக் கிடைக்க வேண்டும் அரசாங்கத்தினால் அது முடியாமல் போனால் அம்மாணவர்களின் நிலை என்ன?என்பதிலும் நாம் கரிசனை கொண்டவர்களாக இருக்க வேண்டும் இன்று நமதூரில் நீதிபதியாக இருக்கும் அப்துல் ரசாக் பயாஸ் தனது எல் எல் எம் படிப்பினை வெளிநாட்டு தனியார் பல்கலைக் கழகத்தில் முடித்துள்ளார் இது எவ்வாறு சாத்தியப் பட்டது ? வெளி நாடுகளில் தனியார் பல்கலைக் கழகங்கள் நடத்த முடியும் என்றால் நம்நாட்டில் என்ன பிரச்சினை உள்ளது என்பதனைக் கண்டு ஆராய்ந்து முடிவு தேட வேண்டியது உரியவர்களின் கடமைதானே.

 

 ஆகவே அரசாங்கம் தகுதி உடைய அனைத்து மாணவர்களுக்கும் வெட்டுப் புள்ளி இன்றி பல்கலைக் கழக அனுமதியினைக் கொடுப்பதற்கான நடவடிக்கைகளைக் கொண்டுவரவேண்டும் இல்லாவிட்டால் தனியார் பல்கலைக் கழகத்தின் தேவை அத்தியவசியமானதொன்றாகி விடும் தகுதி உடையவர்கள் அரசாங்கத் தொழில் மாத்திரம்தான் செய்ய வேண்டும் என்ற நிலை மாறி பல வேலை வாய்ப்புக்களை உருவாக்கக் கூடிய திறமைசாலிகளாக மாறுவதற்கு இது வழிவகுக்கலாம்