முதல் அமைச்சர் காரியாலயத்தில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடல்!

மா.சபை.உறுப்பினர் அன்வரின் ஏற்பாட்டில் குச்சவெளி கோட்டக்கல்வி பாடசாலைகளின் குறைபாடுகள்  கலந்துரையாடல் முதல் அமைச்சர் செயலகத்தில் 
குச்சவெளி பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட குச்சவெளி கோட்ட பாடசாலைகளான புல்மோட்டை புடவைக்கட்டு குச்சவெளி இறக்ககண்டி நிலாவெளி போன்ற பாடசாலைகின் நீண்டகால ஆசிரியர் பற்றாகுறை பௌதீக வளங்கள் தொடர்பான கலந்துரையாடல்  திங்கள் (23) கிழக்கு மாகாண முதல் அமைச்சர் செயலகத்தில்  முதல்வர் நசீர் அஹ்மத் தலைமையில் மாகாண சபை உறுப்பினர்(குழு தலைவர் ) ஆர்.எம்.அன்வரின் ஏற்பாட்டில் இடம்பெற்றது .
12249731_10207673892394963_4701140872900457213_n_Fotor
குறித்த நிகழ்வுக்கு கல்வி அமைச்சின் மாகாண பணிப்பாளர் எம்.ரீ.நிஸாம் திருகோணமலை கல்விவலயம் சார்பாக உதவி வளைய கல்வி பணிப்பாளர் மற்றும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் லாகிர் முன்னாள் பிரதி அமைச்சர் எம்.எஸ்.தௌபீக் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் ஆசிக் பாடசாலையின் அதிபர்கள் பிரதேச பாடசாலையின் அபிவிருத்தி ககுழுக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர் .
12278998_10207673890114906_4412639748943363064_n_Fotor
குறித்த நிகழ்வின் பொது பல குறைபாடுகள் சுட்டிகாட்டப்பட்டன 
ஆசிரியர் பற்றாகுறை அத்துடன் முறையற்ற ஆசிரியர் இடமாற்றம் போன்ற இன்னும் பல குறைபாடுகள் சுட்டிகட்டபட்டதுடன் மாகாண பணிப்பாளர் தெரிவிக்கையில் அடுத்த ஜனவரி முதல் முறையான இடமாற்றம் குறித்து அவதானமாக இருப்பதுடன் குறித்த பாடசாலைகளுக்கு ஆசிரியர் வெற்றிடங்கள் நிரப்பப்படும் எனவும் அத்துடன் மாகாண சபையின் கீழ் சுமார்  300 க்கு  மேற்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கபடுள்ளதாகவும் அதிலும் குறித்த மாவட்டத்தில் உள்ளவர்களை சொந்த மாவட்டத்திலே நியமிப்பதாகவும் தீர்மானிக்கபட்டதாக தெரிவித்தார் .
மேலும் முதல் அமைச்சர் பேசுகையில் இதுகுறித்து தான்  எதிர்வரும் ஜனவரி முதல் முறையான பொறிமுறையின் கீழ் கல்வி நடவடிக்களை கொண்டு செல்லபடுவதுடன் குச்சவெளி கோட்ட பாடசலகளுக்கான வெற்றிடங்கள் விசேடமாக கவனத்தில் கொள்ளப்படும் எனேவும் தெரிவித்தார்.
11988519_10207673890314911_1180344879387975116_n_Fotor