இலங்கைப் பணிப்பெண்ணைக் காப்பாற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது : தலத்தா அத்தக்கோரல

 

அஷ்ரப் ஏ சமத்

சவுதி அரேபியாவில்  தண்டனைக்குள்ளாக்கப்பட்ட  கொழும்பைச் சோந்த 3 குழந்தைகளின் தாய் பணிப்பெண்னின்  மரண தண்டனை வழங்குவதையிட்டு  எமது வெளிநாட்டு வேலைவாயப்பு  அமைச்சு, மற்றும் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு சவுதியில் உள்ள இலங்கைத் துாதுவராலயம் இணைந்து அந்த தண்டனையில்  இருந்து மண்னிப்பு வழங்கி அவரை விடுவிப்பதற்காக எமது செலவில் அங்குள்ள சட்டத்தரணிகள் ஊடாக  சகல நடவடிக்கையும் எடுத்து வருகின்றோம். என வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சா் தலத்தா அத்துக்கொரல தெரிவித்தாா்.

SAMSUNG CSC

இன்று (23) அவரது அமைச்சில் நடைபெற்ற ஊடகமாநாட்டிலேயே இதனைத் தெரிவித்தாா். 

அங்கு அமைச்சா் மேலும்  தெரிவிக்கையில் –

மேற்படி இலங்கைப் பணிப்பென்னைக்  காப்பாற்ற   எமது அமைச்சு வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகமும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லையென ஊடகமொன்றில் தவறான செய்திகள் வெளியிட்டுள்ளனா். அச் செய்தி தவாறானதாகும். 

இந்தப் பணிப்பெண் 2013 மே மாதத்தில் சவுதி அரேபியா சென்றுள்ளாா். அதன் பின் இப் பெண்னுக்கும் இலங்கையைச் சோ்நத இன்னொரு ஆனுக்கும் இடையிலேயே தொடா்பு ஏற்பட்டுள்ளது. அதன் பின்னா்  இச்சம்பவம் நடைபெற்று ஒரு வருடத்திற்குப் பிறகே இவா்களுக்கு  எதிராக வழக்கு தொடரப்பட்டு 4 முறை விசாரணையின்போதும் இந்தப் பெண்னும்   தனது தவறை இப் பெண் ஏற்றுக் கொண்டுள்ளாா்.   ஆனால் ஆனுக்கு கசையடி வழங்கப்பட உள்ளது. ஆனால் இந்தப் பெண்னுக்கு கல்லெறிந்து மரணதண்டனை வழங்கப்பட உள்ளது. 

இந்தத் தீா்ப்பை அந்த நாட்டு வெளிநாட்டு அமைச்சு  2015 மே மாதமே இலங்கை வெளிநாட்டு அமைச்சுக்கு அறிவித்திருந்தது.  இவ் வழக்கு சம்பந்தமாக கடந்த ஆகஸ்ட் 27ஆம் திகதி எமது வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகமும் தற்பொழுது அங்கு கடமையில்  உள்ள சவுதி துாதுவா் அஸ்மி தாசிம் ஊடக  மேன்முறை செய்து அந்த நாட்டு  சட்டத்தரணிகள் ஊடாக நாம் இப் பெண்னின் விடுதலைக்காக  மேன்முறையீடு செய்துள்ளோம். இவ் வழக்கு தீா்ப்பில் அந்த நாட்டு  மதத்தலைவா்கள் கொண்ட குழுவாகும்.  

அந்த நாட்டின் நீதி , மத சட்டம் ஒழுங்குகளில் இலங்கையில் இருந்து சென்ற 4 இலட்சம் தொழிலாளா்களும் அடிபணியவேண்டும்.  மண்னித்து விடுதலை பெறுவதற்கு அந்த நாட்டு அரச மண்னாிடம்   முறையிட்டாலும் விடுதலை பெறுவதில்  சாத்தியமற்றதாகவே உள்ளது.. வெளிநாடுகளிலும் 20 இலட்சம் இலங்கையா் தொழில் செய்கின்றனா். அதில் பணிப்பெண்களை வெளிநாட்டு அனுப்புவதை படிப்படியாக குறைந்து வருகின்றது.  முற்றாகவே தடைசெய்ய முடியாது. அது அவா்களின் அடிப்படை உரிமையாகும். தனக்கென தொழில் தேடி  வெளிநாடுகளுக்குச் செல்கின்றனா்.
  

இம்முறை வரவு செலவுத்திட்டத்தில் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கு செல்லும் பணிப்பெண்கள் ஆகக் குறைந்தது 45ஆயிரம் ருபா சம்பளம் பெறும் முகவா்கள் ஒப்பந்தத்தில் அனுப்பபடுவா். இந் நடைமுறை எதிா்வரும் ஜனவரியில் அமுலாகும்  எனவும் அமைச்சா்  தலாத்தா அத்துக் கொரலா தெரிவித்தாா்.