நான்கு சக்கர வாகனங்களுக்கு மட்டுமே புகை பரிசோதனைகளுக்காக கட்டணம் அறவிடப்படும் !

 

நான்கு சக்கர வாகனங்களுக்கு மட்டுமே புகை பரிசோதனைகளுக்காக 5000 ரூபாய் அறவிடப்படும் என, நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க குறிப்பிட்டுள்ளார். 

images

இதன்படி முச்சக்கர வண்டிகளுக்கோ அல்லது இரு சக்கர வாகனங்களுக்கோ இந்தக் கட்டணம் அறவிடப்படாது எனவும் அவர் கூறியுள்ளார். 

இன்று பாராளுமன்றத்தில் இடம்பெற்று வரும் வரவு செலவுத்திட்ட விவாதத்தின் போதே ரவி கருணாநாயக்க இவ்வாறு கருத்து வௌியிட்டுள்ளார். 

எதுஎவ்வாறு இருப்பினும் தற்போது முச்சக்கர வண்டிகள் மற்றும் இரு சக்கர வாகனங்களுக்கு புகை பரிசோதனைக்காக அறவிடப்படும் கட்டணங்கள் விலக்களிக்கப்படுமா என்பது குறித்து அமைச்சர் எதனையும் குறிப்பிடவில்லை.