அமைச்சர் ரவூப் ஹக்கீம் சமந்தா பவரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார் !

 

Shafeek Hussain

 

1985 ஆம் ஆண்டு முதல் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளபட்ட யுத்த குற்ற செயல்கள் தொடர்பாக விசாரணைக்கு உள்வாங்கபட வேண்டும் என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் சமந்தா பவரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

CUZrxC9WoAATMAn_Fotor

கடந்த சனிகிழமை 3 நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள அமெரிக்காவின் ஐக்கிய நாடுகளுக்கான வதிவிட பிரதிநிதி சமந்தா பவர் அவர்களுடன் வெளிவிவகார அமைச்சில் இடம்பெற்ற இந்த சந்திப்பின்போதே அமைச்சர் ரவூப் ஹக்கீம் மேற்படி வேண்டுகோள்களை விடுத்தார்கள் .

வடக்கு முஸ்லிம்களின் வெளியேற்ற, முஸ்லிம் பள்ளிவாசல்கள் மீது கடந்த சிலவருடங்களாக மேற்கொள்ளபட்ட தாக்குதல், 13வது அரசியலமைப்பு திருத்த சட்டம் நாட்டில் முழுமையாக அமுல்படுதுவதுக்கு அழுத்தம் கொடுக்க படவேண்டும், தேர்தல் முறையில் மாற்றத்தை கொண்டுவருவதானது முஸ்லிம் மற்றும் சிறுபான்மை சமூகங்களுக்கு தாக்கத்தை ஏற்படுத்திவிடகூடாது அவ்வகையில் புதிய தேர்தல் முறைமை அறிமுகபடுத்த படவேண்டும்

போன்ற விடயங்களையும்  ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ரவுப் ஹகீம் அவர்கள் சமந்தா பவரிடம் சுட்டிக்காட்டினார்