கல்விக்காக இதுவரை எந்த அரசாங்கமும் ஒதுக்கீடு செய்யாத பாரிய அளவு தொகை நிதியை இம்முறை வரவு செலவு திட்டத்தினூடாக புதிய அரசாங்கம் ஒதுக்கீடு செய்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
கடந்த தசாப்தங்களில் ஒதுக்கீடு செய்யபட்ட நிதியையும் விட அது ஐந்து மடங்கு அதிகமானது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சுட்டிக் காட்டியுள்ளார்.
இலவசக் கல்வியை வழங்குவதற்கு அரசினால் முடியுமான அனைத்து நடவடிக்கைகளையும் இந்த அரசாங்கம் முன்னெடுக்கும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
ஆண்களுக்கான முன்மாதிரி கால்லூரியில் இன்று காலை நடைபெற்ற வருடாந்த பரிசளிப்பு நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
தீர்மானத்துடனும் அர்ப்பனிப்புடனும் வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கு சிறுவர்கள் முன்வர வேண்டும் என்றும் தெரிவித்தார்.