( வீடியோ )ஓட்டமாவடி ஜும்மா பள்ளிவாயலின் விமர்சனத்திற்கு உள்ளாகும் ஹாரூன் ஸஹ்வியின் புதிய ஜும்மா பள்ளிவாயல் !

ஓட்டமாவடி அஹமட் இர்ஸாட்

 

வீடியோ:- புதிய ஜும்மா பள்ளிவாயலுக்கெதிரான கருத்துக்கள்

 

பலமாதங்களாக கல்குடா ஓட்டமாவடி ஜும்மா பள்ளிவாயலின் விமர்சனத்திற்கு உள்ளாகிவருகின்ற கல்குடா அல்-கிம்மா நிறுவனத்தின் பணிப்பாளர் ஹாரூன் ஸஹ்வியினால் ஓட்டமாவடி கொழும்பு பிரதான வீதியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள புதிய ஜும்மா பள்ளிவாயலானது ஓட்டமாவடி ஜும்மா பள்ளிவாயல் இருக்கின்ற பிரதேசத்திற்குள் ஜும்மா தொழுகையினை நடாத்துவதினை நிறுத்திக்கொள்ள வேண்டும் என ஓட்டமாவடி ஜும்மா பள்ளிவாயலின் நம்பிக்கையாளர் சபையின் செயலாளர் எம்.யூ.எம்.இஸ்மாயில் அதிபர் 20.11.2015 வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகைக்கு பின் ஓட்டமாவடி ஜமாத்தாரிடம் பகிரங்கமாக வேண்டிக்கொண்டார்.

 

03 - Copy - Copy_Fotor

 

தொடர்ந்து நம்பிக்கையாளர் சபையின் செயலாளர் இஸ்மாயில் அதிபர் தெரிவித்த கருத்திலிருந்து விளங்குவதாவது…, ஓட்டமாவடி ஜும்மா பள்ளிவாயல் அமைந்துள்ள இடத்திலிருந்து சுஆர் 200மீற்றர் தொலைவிலேயே குறிப்பிட்ட ஹாரூன் ஸஹ்வியின் புதிய ஜும்மா பள்ளிவாயலானது அமைந்துள்ளதாகவும், அவ்வாறானதொரு ஜும்மா பள்ளிவாயலின் தேவை ஓட்டமாவடி ஜமாத்தாரினக்கு கிடையாது என்றும், இது தனிப்பட்ட ஹாரூன் ஸஹ்வியின் தேவையினை கருத்தில் கொண்டும், அவருக்கு நிதி உதவி அளிக்கின்ற சவூதி அராபியாவின் தனவந்தரின் ஆசைக்கேற்பவுமே குறித்த பள்ளிவாயலில் ஜும்மா தொழுகையினை நடாத்துவதாக தெரிவித்தார்.

 

DSCN5376_Fotor

அதிலும் முக்கியமாக காலாலமாக ஒற்றுமையுடன் செயற்பட்டு வருகின்ற ஓட்டமாவடி மக்களை எதிர்காலத்தில் பிரிவினைக்கு இட்டுச்செல்கின்ற திட்டமிட்ட செயற்பாடாக அமைக்கின்ற காரணத்தினால் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஹாரூன் ஸஹ்வியின் பள்ளிவாயலில் ஜும்மா தொழுகையினை நடாத்துவதினை தடை செய்வதற்கு ஓட்டமாவடியில் வாழ்கின்ற ஒட்டுமொத்த ஜமாத்தினரும் ஒன்று சேர வேண்டும் என வேண்டிக்கொண்டார்.

DSCN5387_Fotor

இது சம்பந்தமாக ஓட்டமாவடி ஜும்மா பள்ளிவாயலின் நம்பிக்கையாளர் சபையின் செயலாளர் இஸ்மாயில் அதிபரை சந்தித்து பல கேள்விகளை தொடுத்து அவருடைய பல கருத்துக்களை அறிந்து கொண்டதன் காணொளியினையும், 20.11.2015 ஜும்மா தொழுகைக்கு பிற்பாடு ஓட்டமாவடி ஜும்மா பள்ளிவாயலில் இடம்பெற்ற சம்பவத்தின் காணொளியினையும் எமது இணையநாளிதல் வாசகர்கள் பார்வையிடுவதற்காக இங்கே பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.