நிறைவேற்ற அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை இரத்து செய்து, புதிய அரசியலமைப்பை உருவாக்குவது மற்றும் தேர்தல் முறைமையில் மாற்றத்தை ஏற்படுத்துவது குறித்து ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட அமைச்சரவை உப குழு உறுப்பினர்களின் பெயர்கள் இன்று அறிவிக்கப்பட்டது.
இந்த குழுவில் 11 உறுப்பினர்கள் அங்கம் வகிக்கின்றனர்.
பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அமைச்சரவை உப குழுவில் அமைச்சர்களான விஜயதாச ராஜபக்ஸ, டி.எம்.சுவாமிநாதன், நிமல் சிறிபால டி சில்வா, சுசில் பிரேமஜயந்த, லக்ஷ்மன் கிரியல்ல, மலிக் சமரவிக்ரம, ரவூப் ஹக்கீம், ரிஷாட் பதியூதீன், பாட்டலி சம்பிக்க ரணவக்க மற்றும் மனோ கணேஷன் ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.